Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in TamilRepresentative Image.

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்துடன் செய்வார்கள் என்று நமக்கு தெரியும். அவை பார்ப்பதற்கு எதற்தார்த்தமாக இருந்தாலும், அதற்கு பின்னாடி நன்மைகள் பன்மடங்கு இருக்கும். அப்படி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரியமான விழா தான் பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை என்பது நம்மை காக்கும் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி சொல்வதே. இதுவொரு பக்கம் இருப்பினும், இவை நம் உடலுக்கு மறைமுகமாக ஆரோக்கியம் தரும் நாள். 

பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in TamilRepresentative Image

அதாவது, முற்காலத்தில் மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் ஆரம்பிக்கும்போது, உடலில் அதிக உஷ்ணசக்திகள் மாறிமாறி வெளியேறி, பெரியம்மை, காலரா போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்திவிடுமாம். அதுமட்டுமல்லாமல், மழைக்காலம் முடிந்ததுமே காட்டில் இருக்கும் நச்சுப்பூச்சிகள் அனைத்தும் வீட்டை நோக்கி படையெடுக்கும். இதை தடுக்கவே பொங்கல் பண்டிகை எப்போதும் குளிர்காலத்தின் ஒருபகுதியில் நடைபெறுகிறது. 

பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in TamilRepresentative Image

பொங்கல் பண்டிகையின் சிறப்பு:

பொங்கல் வந்துவிட்டால் சில நாட்களுக்கு முன்பாகவே வீட்டை சுத்தம்படுத்தி, கிராமப் பகுதியில் சுண்ணாம்பினால் வெள்ளையடித்து மாட்டுச்சாணம் கொண்டு மொழுகுவார்கள். ஏனென்றால், சுண்ணாம்பும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால் நச்சுப்பூச்சுகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுக்காக்க முடியும். மேலும் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிப்பதால் சுவர்களில் சூரியக் கதிர்களால் ஏற்படும் தாக்கத்திலிருந்து வீட்டை பாதுகாக்கலாம். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு, அம்மை போன்ற நோய்களும் நம்மை நெருங்காது. 

பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in TamilRepresentative Image

காப்புக் கட்டுதல் என்றால் என்ன?

அந்த காலத்தில் பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முதல்நாள், அதாவது போகிப்பண்டிகையின் போது "காப்பு கட்டுதல்" எனும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் சிறப்பே மழைக்காலத்தில் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையில் இருந்தும், விஷஜந்துக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளவும், வேப்பிலை, மாவிலை, சிறுபீளை (பூலாப்பூ), தும்பை, துளசி, ஆவாரம் பூ, பிரண்டை போன்ற மருத்துவ மூலிகைகளை வீட்டின் முகப்புகளிலும், வீதிகளிலும் தோரணங்களாக தொங்கவிடுவார்கள். 

பொங்கலன்று காப்பு கட்டுவதில் மறைந்திருக்கும் மெய்சிலிர்க்கும் மகிமை.. | Pongal Kappu Kattu Explained in TamilRepresentative Image

அந்தவகையில், இந்த வருடம் காப்புக் கட்ட நல்ல நேரம் என்று பார்த்தால் போகி பண்டிகையன்று [ஜனவரி 14, 2023] மாலை 04.30 - 05.30 மணிக்குள் உகந்த நேரமாக இருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் காப்புக் கட்டிவிடுவது நல்லது. எனவே, நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை தவறாமல் கடைப்பிடிப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்