சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திதி அல்லது சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த 3ம் நாள் வரும் திதி 'அட்சய திருதியை' என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, செழிப்பு என்று அர்த்தம். அந்தவகையில், அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பெருகும் என்பது ஐதீகம்.
அதனால்தான் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எவ்வளவு விலையாக இருந்தாலும் கிராம் கணக்கிலாவது வாங்குவார்கள். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது வீடு, மனை, உப்பு, அரிசி, ஆடை போன்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கலாம்.
அன்றைய தினத்தில் எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும். ஒருவேளை தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாதவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதால் நம் சந்ததியினர் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
2023ல் அட்சய திருதியை எப்போது?
இத்தனை சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி (சித்திரை மாதம் 10 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 07.49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 மணிக்கு முடிவடைகிறது.
When is Akshaya Tritiya in 2023:
Saturday, 23 April 2023
Tritiya Date Start | 22 April 2023 at 07:49 AM
Tritiya Date Ends | 23 April 2023 at 07:47 AM
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…