அனுமனின் மந்திரமான ஸ்ரீ ராமஜெயம் மந்திரம் எழுதி அனுமனிடம் சமர்ப்பித்தால், அது கோடான கோடி பலன்களைத் தரும் என்பது வழக்கம். தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் அனுமன். ஆன்மீகக் கூற்றின் படி ராம நாமாவை சிந்தித்தால், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என ஈஸ்வரன் கூறுகிறார்.
ஸ்ரீராமஜெயம் எழுதுவதன் மூலம் செல்வம் பெருக, வியாபார முன்னேற்றத்திற்கு, தொழில் முன்னேற்றத்திற்கு, குழந்தை பாக்கியம் கிடைக்க, கண் திருஷ்டி நீங்க போன்ற அனைத்து வகையான நன்மைகளையும் பெறுவதற்கு ஸ்ரீராம ஜெயம் எழுதுவது நன்மையைத் தரும். அதே சமயம், ஸ்ரீராமஜெயம் எழுதுவதற்கென ஒரு முறை உள்ளது. அதன் படி எழுதுவதன் மூலமே வேண்டும் பலன்களைப் பெற முடியும்.
ஸ்ரீராமஜெயத்தை ஒரு குடும்பம் 1008 முறையாவது எழுத வேண்டும். அதே போல, ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீராமஜெயம் என சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.
இன்று பலரும் ஸ்ரீராமஜெயம் எழுதுகிறார்கள். ஆனால், அதை முறையாக கோவிலில் போய் சேர்ப்பது என்பது ஒரு சிலரே மட்டுமே செய்கின்றனர். ஆனால், நாம் ஸ்ரீராமஜெயம் எழுதுவது மட்டுமல்லாமல் அதனை இறைவனிடம் சேர்ப்பதே பல விதமான நன்மைகளைத் தரக்கூடியதாக அமையும்.
கோவிலுக்குச் சென்று ஸ்ரீராமஜெயம் எழுதியதை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு உதவும் வகையில், வாலாஜா பேட்டையில் உள்ள ஸ்ரீகுபேர வீர ஆஞ்சநேயர் ஆலயம் ஆனது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன் படி, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி இந்த ஆலயத்திற்கு அனுப்பினால், அவர்கள் இதை இறைவனிடம் சேர்ப்பார்கள்.
இவ்வாறு எழுதும் போது, கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
வெள்ளைக் காகிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் உங்களுடைய கோத்ரம், நட்சத்திரம், ராசி, பெயர் மற்றும் பிரார்த்தனையை எழுத வேண்டும்.
பிறகு, A4 ஷீட் ஒன்றை வாங்கி, அதன் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவ வேண்டும்.
எதிரிகளிடம் விடுபடுதல், செய்வினை நீங்குதல், கண் திருஷ்டி விலகுதல் போன்றவற்றிற்கு சிவப்பு நிறத்திலும், சனி தோஷம், தசா புத்தி, நவக்கிரஹ தோஷம் போன்றவை நீங்க கருப்பு நிறத்திலும், செல்வ வளம் பெருக பச்சை நிறத்திலும், நோய்கள் விலகி ஆரோக்கியமாக இருக்க, மற்றும் பொது பிரார்த்தனை நிறைவேற நீல நிறத்திலும் ஸ்ரீராமஜெயம் எழுதுவதன் மூலம் வேண்டிய வரங்களைப் பெறலாம் எனக் கூறுவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…