Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரமலான் 2023 நோம்பு தொடக்கம் எப்போது? பின்னால் இருக்கும் வரலாறு என்ன? | Ramadan 2023

Priyanka Hochumin Updated:
ரமலான் 2023 நோம்பு தொடக்கம் எப்போது? பின்னால் இருக்கும் வரலாறு என்ன? | Ramadan 2023 Representative Image.

உலகத்தில் பல மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. அதில் இஸ்லாமிய மதத்தின் புனிதமான மாதமாக திகழ்வது ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் மாதமாகும். அந்த ஒரு மாத காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதமிருந்து, அல்லாவை தொழுது, குரான் படித்து, அல்லா மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள். அந்த காலத்தில் நோம்பு இருப்பதை கெடுக்கும் வகையில் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

ரமலான் 2023 நோம்பு தொடக்கம் எப்போது? பின்னால் இருக்கும் வரலாறு என்ன? | Ramadan 2023 Representative Image

ரமலான் பண்டிகை தேதி

ரமலான் பண்டிகை ஒவ்வொரு நாட்டில் வித்தியாசமான தேதியில் கொண்டாடப்படும். இந்தியாவைப் பொறுத்த வரையில்,

ரமலான் நோம்பு தொடங்கும் நாள் - மார்ச் 22, 2023

ரமலான் நோம்பு முடியும் நாள் - ஏப்ரல் 21, 2023

ரம்ஜான் பண்டிகை - ஏப்ரல் 22, 2023 அல்லது ஏப்ரல் 23, 2023

ரமலான் 2023 நோம்பு தொடக்கம் எப்போது? பின்னால் இருக்கும் வரலாறு என்ன? | Ramadan 2023 Representative Image

ரமலான் என்றால் என்ன?

இஸ்லாமிய மதத்தின் படி ரமலான் என்பதன் பொருள் "எரியும் வெப்பம் [Burning Heat]". வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த புனித மாதத்தில் தான் குரான் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை நினைவுக்கூறும் வண்ணம் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது, இஸ்லாமிய சமயத்தின் நான்காவது தூணான சாவ்ம் (Sawm)-வை கௌரவிக்கும் வகையிலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரமலான் 2023 நோம்பு தொடக்கம் எப்போது? பின்னால் இருக்கும் வரலாறு என்ன? | Ramadan 2023 Representative Image

எப்படி விரதம் இருப்பார்கள்?

சரியாக ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் [மார்ச் 22, 2023] ரமலான் நோம்பு ஆரம்பிக்கும். அன்று முதல் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சுஹூர் அல்லது செஹ்ரி சாப்பிடுவார்கள். பிறகு சூரிய அஸ்தமனம் ஆகிய பின்பு பேரிச்சம்பழம், நோம்பு கஞ்சி அல்லது தண்ணீர் குடித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பால், பழம், தண்ணீர் என்று எதுவும் சாப்பிட கூடாது. அது மட்டும் இன்றி எச்சில் கூட விழுங்க கூடாது. இப்படி பட்ட கடுமையான நோம்பு ஏப்ரல் 21, 2023 அன்று முடிவடையும். இதற்கு அடுத்த நாள் ஈத்-அல்-ஃபிட்ர் கொண்டாடப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்