Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தடையின்றி தங்கம் சேரணுமா? இந்த ராசியினர் இந்த கிழமையில் தங்கம் வாங்குங்க.. | Auspicious Day to Buy Gold

Nandhinipriya Ganeshan Updated:
தடையின்றி தங்கம் சேரணுமா? இந்த ராசியினர் இந்த கிழமையில் தங்கம் வாங்குங்க.. | Auspicious Day to Buy GoldRepresentative Image.

தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதும்கூட. ஏனென்றால், உடலில் உள்ள எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யக்கூடிய சக்தி தங்கத்திற்கு உண்டு. இதனால் தான் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு தங்கம் சேர்ந்துக்கொண்டே இருக்கும், ஆனால் ஒரு சிலர் வீட்டில் தங்கம் தங்கவே தங்காது, வாங்கவே முடியாமல் போகும். இதற்கு ராசியும் ஒரு காரணம். அதாவது, 12 ராசிக்காரர்களும் அவர்களுக்கே உரிய நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு, தங்கம் மேலும் மேலும் பெருகும். சரி வாங்க, எந்த ராசிக்காரங்க எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்பதை பார்க்கலாம்.

தங்கம் வாங்க ராசியான நாள்:

பொதுவாக, தங்கம் வாங்குவதற்கு மிக உகந்த நாள் அட்சய திருதியை என்று சொல்வார்கள். ஆனால், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்று கிடையாது. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரையில் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் கூட அதிகம் தங்கம் வாங்கும் யோகம் வரும். அதேபோல், வெள்ளி, புதன் கிழமைகளில் பூராடம், பரணி, பூரம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினாலும் தங்கம் பெருகும். 

தங்கம் வாங்க உகந்த நட்சத்திரம்:

சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், ஹஸ்தம், அசுவினி, பூசம், அபிஜித், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி. ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் மேஷம், விருச்சிகம், சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும், மிருகசிரீடம், ரேவதி, சித்திரை, அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.

தடையின்றி தங்கம் சேரணுமா? இந்த ராசியினர் இந்த கிழமையில் தங்கம் வாங்குங்க.. | Auspicious Day to Buy GoldRepresentative Image

எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்:

மேஷம் ராசியினர் - ஞாயிறு, வெள்ளி

ரிஷபம் ராசியினர் - புதன், வெள்ளி 

மிதுனம் ராசியினர் - திங்கள், வியாழன் 

கடகம் ராசியினர் - ஞாயிறு, திங்கள், புதன்

சிம்மம் ராசியினர் - புதன், வெள்ளி

கன்னி ராசியினர் - சனிக்கிழமை

துலாம் ராசியினர் - திங்கள், வெள்ளி

விருச்சிகம் ராசியினர் - சனிக்கிழமை

தனுசு ராசியினர் - வியாழன்

மகரம் ராசியினர் - புதன், வெள்ளி

கும்பம் ராசியினர் - புதன், வெள்ளி, ஞாயிறு

மீனம் ராசியினர் - திங்கள், வியாழன்

இந்த ராசியினர் இந்த கிழமைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். அதேசமயம், இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் வாங்க வேண்டும். இது தவிர்த்து, மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காது. எனவே, உங்களுக்கே உரிய நாட்களில் தங்கம் வாங்கி பயனடையுங்கள். புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் வைத்து கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை