Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in Tamil

Gowthami Subramani Updated:
அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image.

Akshaya Tritiya 2023 in Tamil: அட்சய திருதியை என்றால், நம் அனைவருக்கும் முதலில் தோன்றுவது புதிதாக நகை வாங்குவது. ஆனால், உண்மையாக அதைத் தவிர பல்வேறு வகையான விஷயங்கள் உள்ளன. இதன் முக்கியத்துவம் மற்றும் பெருமைகள் அனைத்தையும் “பவிஷ்யோத்தர புராணம்” தெளிவாக விளக்கியுள்ளது. இந்த சிறப்பான நாளுக்குப் பல வகையான அபூர்வ விஷயங்கள் உள்ளன.

தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் வளர்பிறையில் அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதே அட்சய திருதியை ஆகும். இந்த சிறப்பான நாள் ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக் கூடிய நாளாகக் கருதப்படும். மேலும், இந்நாளுக்கான முக்கியத்துவத்தை இங்கே காணலாம்.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

1. கிருதயுகம் பிறந்த நாளைத் தான் அட்சய திருதியை என்று அழைப்பர்

2. பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் அட்சய பாத்திரம் பெற்றது இந்த சிறப்பான நாளில் தான்.

3. பூமியை முதன் முதலில் கங்கை தொட்ட தினம்.

4. இந்த சிறப்பான நாளில் தான் குபேரன் நிதி கலசங்களைப் பெற்றார்.

5. இந்த நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

6. அட்சய திருதியை நாளின் முக்கியத்துவம், பெருமைகள் அனைத்தையும் “பவிஷ்யோத்திர புராணம்” தெளிவாக விவரிக்கிறது.

7. இன்றைய தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

8. இந்த தினத்தன்று தான், சிவபெருமான் பிட்சாடனராக வந்து அன்னபூரணியிடம் யாசகம் பெற்றது.

9. விஷ்ணுவின் 6 ஆவது அவதாரமான பரசுராமர் அவதரித்த தினம் அட்சய திருதியை தினம்

10. இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி என்று புராணம் கூறுகிறது. சாகம்பரிதேவியால் காய்கறி, மூலிகைகள் உருவாக்கப்பட்ட தினம் இன்று.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

11. அட்சய திருதியை தினத்தன்று தான், விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

12. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக மிகச் சிறப்பான நாளாகும்.

13. வட மாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதைப் புனிதமாகக் கருதுகிறார்கள்.

14. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை நாளை மறக்காமல் மண் வெட்டு எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

15. வட இந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை இந்த நாளில் தான் தொடங்குவார்கள்.

16. பீகார், உத்திரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தான் தொடங்குவார்கள்.

17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த தினம் அட்சய திருதியை தினம்

18. உத்திரபிரதேசம், பீகார் மாநிலத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை அன்று தான் தொடங்குவார்கள்.

19. அட்சய திருதியை நாளன்று தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குதற்குரிய பலன் கிடைக்கும்.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

21. இந்த தினத்தில் தான், உலகத்தை பிரம்மா படைத்தார் என புராணங்கள் கூறுகின்றன.

22. இந்த அட்சய திருதியை தினத்தில் தான் மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என புராணங்கள் கூறுகின்றன.

23. அமாசைக்கு மூன்றாவது நாள் அட்சய திருதியை. மேலும், 3 ஆம் எண்ணுக்கு அதிபதியாக இருப்பவர் குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே, தான் குருவுக்கு “பொன்னன்” என்ற பெயரும் உண்டு. இந்த காரணத்தால் தான், அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு என்று கூறுவர்.

24. ஒரு முறை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். பிறகு, மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று தான் அட்சயவரம் பெற்றார். இதனால், மீண்டும் அட்சய தினத்தில் இருந்து தான் வளரத் தொடங்கினார்.

25. அரிதான வேலையைச் சந்திப்பதை “அலப்ய யோகம்” என்று கூறுகிறது சாஸ்திரம். அட்சய திருதியை அலப்ய யோகத்தில் சேரும். எனவே, அரிதான அட்சய திருதியை தவற விட்டால், அதன் பிறகு 1 ஆண்டு காத்திருக்க வேண்டும்.

26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணத்தையும் கூறுவர். அதாவது, அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு ‘அட்சதை’ என்று பொருள். சதம் என்றால், அடிப்பட்டு ஊனமாகாதது என்பது அர்த்தம். அட்சதையால், அட்சயணை மதுசூதனை வணங்குவதால், அந்த திதிக்கு ‘அட்சய திருதியை’ என்றும் பொருள் அமைந்ததாகப் புராணம் கூறப்படுகிறது

27. இந்த அட்சய திருதியை தினத்தை “அட்சய தீஜ்” என்று அழைப்பர்.

28. தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

29. அட்சய திருதியை விரதத்தை முதலில் கடைபிடித்தவர் மகாதயன் எனப் போற்றப்படும் வியாபாரி ஆவார்.

30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியையின் நோக்கமாகும்.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

31. இந்த சிறப்பான அட்சய திருதியை நாள் அன்று குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு இந்த நாளில் செய்யப்படுகிறது.

32. அட்சய திருதியை நாள் அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணின் நாமங்களைப் போற்றி புதிய செயல்களைத் தொடங்கினால் நன்மை சேரும்.

33. மகாலட்சுமி திருமாலின் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக இந்த அட்சய திருதியை தினத்தன்று தான் சிறப்பு வரம் பெற்றாள்.

34. கும்பகோணத்தில் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீ பரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று தான் சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். இந்த சமயத்தில் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உண்டு.

35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் போன்ற கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

36. அட்சய திருதியை நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்று கூறுவர். இந்த தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

37. அட்சய தினத்தன்று வாசுதேவரை வணங்கி கங்கையில் குளிப்பதும் அன்னதானம் செய்வதும், கூடுதல் பலன்களைத் தரும்.

38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புதியவற்றைத் தொடங்குகிறார்கள்.

39. ஏழுமலையான் தனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகப் புராணம் கூறுகிறது. பணத்துக்கு அதிபதி எனப் போற்றப்படும் குபேரன் அட்சய திருதியை தினத்தன்று தான் மகாலட்சுமியை உருகி வணங்கி செல்வத்தைப் பெற்றார் என்பது ஐதீகம். அட்சய திருதியை தினத்தன்று தான் குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் சிறப்பாகக் கூறப்படுகிறது.

40. இந்த சிறப்பான நாளின் அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரக் கூடியதாக அமையும்.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாகக் கருதப்படுகிறது.

42. அட்சய திருதியை தினத்தில் லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு மனதார தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தல் நிச்சயம் ‘கனகதாரை’ உங்கள் வீட்டிலும் செல்வம் பெருகச் செய்வாள்.

43. இந்த தினத்தன்று மிருத்யுஞ்ஜ்ய மந்திரத்தை எழுதி குழந்தைகளினுடைய தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும் என்று கூறுவர்.

44. இந்த அற்புதத் தினத்தன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு அம்சமாகக் கருதப்படுகிறது.

45. இத்தகைய தினத்தன்று சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. இது செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும்.

46. அட்சய திருதியை அன்று, மிருத சஞ்ஜீவினி மந்திரத்தை ஜெபித்தால் நோய்களின் வீரியமும் குறையும்.

47. அட்சய திருதியை நாளில் சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால், நமச்சிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். அதன் பிறகு, தினமும் 108 முறை ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

48. இந்த சிறப்பான நாளில், பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலின் முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால், நமது எல்லாப் பாவங்களும் விலகி விடும் என்பது ஐதீகம்.

49. அட்சய திருதியை தினத்தன்று கர்நாடக மாநிலத்தில் பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதத்தை கடைபிடிப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பார்வதி தேவி வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

50. அட்சய திருதியை தினத்தன்று, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 16 பெருமாள் கோவில்களிலிருந்து 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள்.

கும்பகோணம் பெரிய தெரிவிலிந்த 16 பெருமாள்களும் ஒரு சேர அணி வகுத்து இருப்பர். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் காண பக்தர்கள் தரிசனம் தருவார்கள். இன்றைய நாளில் 16 பெருமாள்களையும் வழிபட்டால், வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை என்பது நகை வாங்குவது மட்டும் அல்ல… இவை அனைத்தும் அடங்கும்…! | Akshaya Tritiya 2023 in TamilRepresentative Image

51. பவிஷ்ய புராணத்தின் படி, இந்த தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்ரை தானம் தருவது சிறந்தது எனக் கூறப்படுகிறது. அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருள்கள், அளிப்பவருக்கு நிறைவாகப் பெருகும்.

52. இந்தத் திருநாளில் முன்னோரை நினைத்து தண்ணீரையும் எள்ளும் அளித்து வணங்க வேண்டும். தண்ணீர் நிரம்பிய குடத்தைத் தானமாகத் தருவது சிறப்பு என்று கூறுவர். இதனையே ‘தர்மகுடம்’ என்றும் கூறப்படுகிறது.

53. இந்தத் திருநாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு தானம் அளித்து, மற்றவர்களுக்கு அன்னம் அளித்த பிறகே உணவை உட்கொள்ள வேண்டும். மேலும், இது ஆரோக்கியத்தையும், மனத்தூய்மையையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் கலந்திருப்பதால், பிறவிப்பயனும் பலன் கிடைப்பதாக இருக்கும்.

54. இந்த நாளில் ‘வசந்த் மாதவாய நம’ என்று கூறி 16 வகை உபசாரங்களால், வசந்த மாதவனை வழிபட வேண்டும். இதில் முக்கியமான ஒன்று, தானம் செய்ய வேண்டிய இந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பது சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை என்று கூறுவர்.

55. அட்சய திருதியை அன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து, வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால், வியாபாரம் பெருகும் என்று கூறுவர். இதனால், எதிரிகளின் தொல்லை நீங்கக் கூடியவையாக இருக்கும்.

56. இந்தத் தினத்தன்று பித்ரு பூஜை செய்வர். இந்த நாளில் செய்யப்படும் பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரக்கூடியவையாக இருக்கும்.

57. அட்சய திருதியை புதன் கிழமை வரும் நாளில், அந்த சிறப்பான நாள் அன்று தானம் செய்தால் பல மடங்கு கூடுதலான நன்மைகளைத் தரக்கூடியவையாக இருக்கும்.

58. அட்சய திருதியை தினத்தன்று ஏழ்மையாக இருப்பவர்களும் தானம் செய்தால், செல்வம் கிடைக்கும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுகிறது.

59. ஒவ்வொரு அட்சய திருதியை தினத்திலும், தவறாமல் தானம் செய்தால், மறுபிறவியில் அரசனுக்கு ஒப்பான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்று கூறுவர்.

60. அன்னை மகாலட்சுமியின் அருள் பெறுவதற்கு, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து பூஜை அறியயில் விளக்கேற்றி வணங்கி, மகாலட்சுமியின் பேரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாகத் தேடி வரும்.

அட்சய திருதியை நாளில் மேற்கூறிய அனைத்தையும் செய்வதன் மூலம், புண்ணியங்கள் பெருகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்