Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி 2023ல் எப்போது வருகிறது..? | When is Chitra Pournami 2023 Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி 2023ல் எப்போது வருகிறது..? | When is Chitra Pournami 2023 TamilRepresentative Image.

பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது 'சித்ரா பௌர்ணமி'. பௌர்ணமியும், சித்திரை நட்சத்திரமும் ஒன்றிணைந்து வருவதே சித்ரா பௌர்ணமி. இது சித்ரகுப்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பண்டிகையாகும். ஏனென்றால் இந்த நாளில் தான் சித்ரகுப்தர் பிறந்தார். இவர் தெய்வீக கணக்காளராகவும், மரணத்தின் கடவுளான எமனின் உதவியாளராகவும் இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்து புராணங்களின்படி, அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த மங்களகரமான நாளில் சித்ரகுப்தரை முழு ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் பிராத்தனை செய்து, தான தர்மங்கள் செய்தால் நம் வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களும் கரைந்துவிடும். மேலும், அவருடைய முழு அருளையும், நீண்ட ஆயுளையும் பெறலாம்.

இதையும் படிங்க | பாவங்களை போக்கி நீண்ட ஆயுளை தரும் சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தர் விரதம் இருப்பது எப்படி? | Chitra Pournami 2023 Viratham in Tamil

சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்:

இந்நாளில், பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், திருவக்கரையில் உள்ள சந்திர மௌலீஸ்வரர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவில் போன்ற கோவில்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் விழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. 

வழிபாடு மற்றும் பலன்கள்:

சித்ரகுப்தர் கோயில்களுக்குச் சென்று மலர்கள், கற்பூரம் மற்றும் தூபங்கள் காட்டி மனதார வணங்கிவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்று உப்பு சேர்க்காத பலகாரங்கள் செய்து பிரசாதமாக கொடுக்கலாம்.

இந்திரன் மற்றும் அவரது குரு பிருஹஸ்பதியின் கதையைப் படித்து தியானிப்பது நன்மை பயக்கும். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அம்பாளின் திருவுருவ படம் அல்லது சிலைக்கு மலர் மாலை, ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது. இவ்வாறு வழிபடுவதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க | சந்திர கிரகணம் 2023: ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. | Chandra Grahanam 2023

சித்ரா பௌர்ணமி 2023 எப்போது?

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி மே மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 

சூரிய உதயம் - மே 05, 2023 காலை 5:55

சூரிய அஸ்தமனம் - மே 05, 2023 மாலை 6:52

சித்ரா பௌர்ணமி திதி ஆரம்பம் - மே 04, 2023 இரவு 11:43

சித்ரா பௌர்ணமி திதி முடிகிறது - மே 05, 2023 இரவு 11:03


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்