Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாவங்களை போக்கி நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் விரதம் இருப்பது எப்படி? | Chitra Pournami 2023 Viratham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பாவங்களை போக்கி நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் விரதம் இருப்பது எப்படி? | Chitra Pournami 2023 Viratham in TamilRepresentative Image.

தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணயும் சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் 'சித்ரா பௌர்ணமி' ஆகும். அதுமட்டுமல்லாமல், எமலோகத்தில் நம் புண்ணிய, பாவ கணக்கை எழுதும் தெய்வீக கணக்காளரான 'சித்ரகுப்தர்' அவதரித்ததும் இந்த புண்ணிய நாளில் தான். அதனால், இந்த நாளில் அவருக்கு விரதம் இருந்து வழிபாட்டு தான தர்மம் செய்தால் அவருடைய முழு அருளை பெறுவதோடு, நீண்ட ஆயுளையும் பெறலாம். அதுமட்டுமல்லாமல், மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். சரி, சித்ரகுப்தருக்கு எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

பாவங்களை போக்கி நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் விரதம் இருப்பது எப்படி? | Chitra Pournami 2023 Viratham in TamilRepresentative Image

சித்ரகுப்தருக்கு விரதம் இருப்பது எப்படி?

சித்ரா பௌர்ணமி தினத்தில் காலையில் தொடங்கும் விரதம், இரவு முழு நிலவை பார்த்து தரிசனம் செய்து சித்ரகுப்தனுக்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் விரதத்தை முடிக்க வேண்டும். 

சித்ரா பௌர்ணமி நாளுக்கு முன்னாடி நாளே வீட்டை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர், சித்ரா பௌர்ணமி நாளில் காலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறை மற்றும் வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு கொள்ளுங்கள். 

பின்னர், விரதத்தை தொடங்கவும். அன்றைய தினம் முழுவதும் பசும்பால், தயிர், நெய் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதன்பிறகு மாலை வேளையில், பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து கொள்ளுங்கள். ஒரு தலவாழை இலையில் சர்க்கரை பொங்கல், பயத்தம்பருப்பும், எருமைப்பாலும் சேர்த்து பாயாசம் செய்து இரண்டையும் நைவேத்தியம் படைக்க வேண்டும். 

பழங்களில் முழு நொங்கு, பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், இளநீர் போன்றவற்றையும் படைக்கவும். பின்னர், ஏடு, எழுத்தாணி வைத்து அருகில் வைத்து கொள்ளவும். பின்னர், வானில் தெரியும் முழு நிலவை தரிசனம் செய்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்பிறகு உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மேலும், அன்றைய நாளில் நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்தல், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி செய்வதால், பாட நோட்டு புத்தகம், பேனா வாங்கி கொடுத்தல், உணவு தானம் செய்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் நம் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும். 

பாவங்களை போக்கி நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் விரதம் இருப்பது எப்படி? | Chitra Pournami 2023 Viratham in TamilRepresentative Image

சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்:

ஓம் கமலவர்ணனே போற்றி

ஓம் சித்திரை உருவே போற்றி

ஓம் பயம் போக்குபவனே போற்றி

ஓம் கால உருவே போற்றி

ஓம் அந்தக நண்பனே போற்றி

ஓம் ஞான உருவே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கணக்கனே போற்றி

ஓம் தர்மராஜனே போற்றி

ஓம் தேவலோக வாசனே போற்றி

ஓம் ஆயுள் காரணனே போற்றி

ஓம் மேன்மை தருபவனே போற்றி

ஓம் குழந்தை வடிவினனே போற்றி

ஓம் குளிகன் உருவினனே போற்றி

ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி

ஓம் சித்திரகுப்தனே போற்றி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்