Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in Tamil

Editorial Desk Updated:
கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image.

இயேசு பிறந்தநாளையே கிறிஸ்துமஸ் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளன்று பார்க்கும் இடம் எங்கும் வண்ணமயமான காட்சிகள் பல வண்ணங்களில் மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், கேக் என பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். மேலும், வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களைத் தொங்கவிட்டு கொண்டாடி மகிழ்வர். இந்த அற்புத கிறிஸ்துமஸ் சிறப்பைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image

கிறிஸ்துமஸ் தாத்தா

சாண்டாகிளாஸ் எனப்படும்  இவர் வெள்ளைநிற தொப்பி , குள்ளமாக , குண்டாண வயரு, சிவப்பு நிற ஆடை அணிந்திருப்பவர். மேலும் பின் முதுகில் பரிசுகள் வைத்திருப்பார். இவரது வாகனம்  ஆனது நீளமான கொம்பினையுடைய அழகான புள்ளிமான் ஆகும். இந்த வாகனத்தில் வந்து குழந்தைகளுக்கு பரிசினை கொடுப்பார் என கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகள் எதிர்பார்ப்பு இவரை நோக்கியே இருந்தது. ஒவ்வொரு ஊரிலும்  ஒவ்வொரு முறையில் வரவேற்பார்கள், சில நாடுகளில் இவரை வண்டியில் அழைத்து வரும் மான்களுக்கு  கேரட் புல் போன்ற உணவை வைத்து வரவேற்பார்களாம்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று சாண்டாகிளாஸ் குழந்தைகளுடன் ஆடிப்பாடி குழந்தைகளுக்கு பரிசினை வழங்குவார், மேலும் அந்தந்த வீட்டில் உள்ள குழந்தைகளும் அவருக்கு பால் கேக் குக்கீஸ் போன்ற உணவுகளை வைத்து மகிழ்வார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image

கிறிஸ்துமஸ் மரம்

இந்த கிறிஸ்துமஸ் மரமானது கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பான ஒன்றாகும். மேலும் இந்த மரமானது பார்ப்பதற்கு வண்ணமயமாக மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த மரமானது பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருந்தாலும் இதனைச் செய்த பிறகு இதன் அழகு பல மடங்கு கூடியிருக்கும்.

இந்த மரத்தை ஜெர்மனியில் உள்ள மக்கள் கும்பிட்டு வந்தனர். அதை கண்ட பொபேனிஸ் என்பவர் மூடநம்பிக்கையை ஒழித்து வருபவர் ஆவார். இவர் அந்த மரத்தை கும்பிட்ட மக்களை பார்த்து கோபமுற்று அந்த மரத்தை வேரோடு சாய்த்தார் பின் அதை அப்புறப்படுத்தினார். பிறகு, அவர் பணி சென்று திரும்பிவரும் வழியில் அதே நாளன்று அந்த மரத்தை அப்புறப்படுத்தினார்.

ஆனால், அதே இடத்தில் மீண்டும் புதிய மரம் முழைத்து நீளமாக வளர்ந்து  வந்தது. இதை கண்ட அவர் மனமுருகி அந்த மரத்தின் முன்பு நின்று மண்டியிட்டு வணங்கினார். அதிலிருந்து இந்த மரம் ஆனது மேலும் பிரபலமானது. அனைவரும் இந்த மரத்தை கிறிஸ்துமஸ் அன்று வீட்டிற்கு வரும் விருந்தினர்களை கவரும் விதமாக வைத்திருப்பர்

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 

கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகள் தோறும் கட்டப்படும் கிறிஸ்துமஸ் ஆனது போலந்து நட்சத்திரம், பென்சில்வேனியே நட்சத்திரம், டேனிக் நட்சத்திரம் எனப் பல பெயர்களைக் கொண்டிருக்கிறது.

இந்த நட்சத்திரமானது இயேசு பிறந்த போது உருவாகியதால், இந்த நட்சத்திரமானது இயேசு அவரின் பிறப்பின் அடையாளமாய் கருதப்படுகிறது. அவர் பிறந்த போது, இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வானில் பிரகாசமான ஒளியோடு புதிதாப் பிறந்திருக்கிறது. அதனால் தான் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரமானது இயேசு பிறந்த நாள் அன்று கிறிஸ்துமஸ் நட்சத்திரமாக அனைவரும் இதை வீடு, மரம் போன்ற இடங்களில் தொங்கவிடப்பட்டு கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தின் அனைத்து நட்சத்திரங்களுமே ஏழு புள்ளிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே அந்த நட்சத்திரத்தின் வடிவம் ஆகும்.

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் செய்யும் முறை

இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை நம் வீட்டிலேயே எப்படி பல விதமாக உருவாக்குவது என்பதைப் பார்க்கலாம்.

இதற்கு உங்களுக்கு எந்த காகிதம் வேண்டுமோ அதை எடுத்து கொள்ளலாம். அது சற்று தடிமனாக இருப்பது சிறந்தது.

காகிதத்தை எடுத்து அதன் நான்கு பக்கமும் சரி சமமாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இரண்டு புறமும் முக்கோணமாக மடிக்கவும். இப்போது ஒரு வடிவம் கிடைக்கும். அதே போல இன்னும் 6 துண்டுகளை தயாரிக்கவும்.

பின் இரண்டும் ஒன்றாக இருக்கும் இடத்தை மையமாக கொண்டு இரு புறத்தில் உள்ள மீதி தேவையற்ற பகுதியை நீக்கவும்.

ஒரு புறத்தை மேலே உள்ளது போல வெட்டி அதன் மற்றொரு புறம்  மடித்து விடவும்.

பின்பு அனைத்தையும் அதே போல செய்து ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து கட்டவும்  பின் அதை விரித்தால் அழகான நட்சத்திரம் தயார். பின் இதில் உங்களுடைய விருப்பத்திற்கேற்ற வண்ணங்களை அடித்து மேலும் பல வகையான அதாவது உங்களுக்கு பிடித்த டிசைனில் செய்து  பயன்படுத்தலாம்.

மின் விளக்கு போல நட்சத்திரங்களும் மிகவும் அழகாக காட்சியளிப்பதால் பல வீடுகளில் இந்த நட்சத்திரமானது தொங்கவிடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தின் வரலாறும், பின்னணியும்! | Christmas History in TamilRepresentative Image

கிறிஸ்துமஸ் ஸ்வீட் :

கிறிஸ்துமஸ் என்றாலே ஸ்வீட்டில் முதலிடம் கேக் தான். கேக்கில் பலவகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கேக்கும் விதவிதமாக வடிவமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் தினம் வருவதற்கு வெகு நாள்களுக்கு முன்பே அதற்கான செய்முறைகள் தொடங்கி விடும். பிளம் கேக், சாக்கலேட் கேக், ஃபுரூட் கேக், ரம் கேக் இது போன்ற ஏராளமான கேக் வகைகள் இருக்கின்றன.

கிறிஸ்தவர்களின் கொண்டாட்டமாக விளங்கும் இந்த சிறப்பு மிக்க தினத்தில் அனைவருக்கும், இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்