Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீபத்தன்று விரதமிருந்து விளக்கேற்றுங்கள்.. வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்...

Nandhinipriya Ganeshan Updated:
கார்த்திகை தீபத்தன்று விரதமிருந்து விளக்கேற்றுங்கள்.. வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்...Representative Image.

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், அக்னியில் உதித்த முருகனுக்கும் இந்த கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மூன்று தெய்வங்களுக்கும் பூஜைகள், பரிகாரங்கள் எல்லாம் கார்த்திகை மாதத்தில் தான் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், கார்த்திகை மாதத்தில் வரக்கூட தீபத்திருநாள் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாகும். கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானின் ஜோடி வடிவத்தை வழிபடுவதே ஆகும். அதன்படி, நெருப்பு ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் விஷேசமாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும். 

அந்த மங்களகரமான நாளில் வாழ்வில் இருக்கும் இருள் என்கிற இன்னல்களை நீங்கி, ஒளி என்கிற ஜோதியை பெறுவதற்காக ஒவ்வொரு வருடமும் நம் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி அண்ணாமலையாரை நினைத்து வழிபடுகிறோம். இந்த கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவது சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று பனையோலைக்கொழுக்கட்டை, பொரி உருண்டை பிரசாதமும் சிறப்பானது. 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்; தேதி, நல்ல நேரம், விளக்கேற்றும் முறை, திசை, எண்ணிக்கை...

கார்த்திகை தீப வழிபாடு:

இந்த மாதம் முருகருக்கும் உகந்த மாதமாகும். எனவே, கார்த்திகை விரதமிருக்க விரும்புவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம். அடுத்ததாக, திருக்கார்த்திகையன்று காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து கொண்டு குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர், பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். 

சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களை பாட வேண்டும். பின்னர், மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். விநாயகர், முருகன், சிவ பெருமான் படங்களை வைத்து வெற்றிலை பாக்கு, பழம், பொரி, நெல் பொரி உருண்டை, பனை ஓலை பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்