Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஏழுஜென்ம பாவங்களை போக்கும் மகாமகக் குளத்தின் சிறப்பு.. | Kumbakonam Mahamaham Kulam Significance in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஏழுஜென்ம பாவங்களை போக்கும் மகாமகக் குளத்தின் சிறப்பு.. | Kumbakonam Mahamaham Kulam Significance in TamilRepresentative Image.

கும்பகோணம் நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயில். சம்பந்தர், அப்பர் போன்ற சைவைக்குரவரகளால் பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும். காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் திருக்குளமாக இருப்பதான் மகாமக குளம். மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஏழுஜென்ம பாவங்களை போக்கும் மகாமகக் குளத்தின் சிறப்பு.. | Kumbakonam Mahamaham Kulam Significance in TamilRepresentative Image

மகா மகம் என்றால் என்ன?

தேவ குருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். 

இந்த நாளில் தான் 'மகாமகத் திருவிழா' நடக்கிறது. இந்த திருவிழாவானது 1518 ஆம் ஆண்டிலிருந்து [1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743, 1755, 1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004, 2016] நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடைசியாக 2016ஆம் ஆண்டு மகாமகம் நடந்தது. அப்போது 10 நாள்கள் பிரம்மோற்சவமாக நடத்தப்பட்டது. அடுத்த முறை கும்பகோணம் மகாமகம் 2028ஆம் ஆண்டு தான் நடத்தப்படும்.

ஏழுஜென்ம பாவங்களை போக்கும் மகாமகக் குளத்தின் சிறப்பு.. | Kumbakonam Mahamaham Kulam Significance in TamilRepresentative Image

மேலும், கும்பகோணத்தில் இருக்கும் 12 சிவன் கோயில்கள், 5 வைணவ கோயில்களின் தீர்த்தவாரி இந்த குளத்தில் வைத்து தான் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல், மகாமகம் குளத்தில் 20 வகையான தீர்த்தங்கள் இருக்கின்றதாக கூறப்படுகிறது.

20 தீர்த்தங்கள்:

  1. பிரம்ம தீர்த்தம்
  2. குபேர தீர்த்தம்
  3. கோதாவரி தீர்த்தம்
  4. கங்கை தீர்த்தம்
  5. வாயு தீர்த்தம்
  6. யமுனை தீர்த்தம்
  7. ஈசான்ய தீர்த்தம்
  8. நர்மதை தீர்த்தம்
  9. இந்திர தீர்த்தம்
  10. சரஸ்வதி தீர்த்தம்
  11. அக்னி தீர்த்தம்
  12. காவிரி தீர்த்தம்
  13. யம தீர்த்தம்
  14. குமரி தீர்த்தம்
  15. நிருதி தீர்த்தம்
  16. பயோஷினி தீர்த்தம்
  17. வருண தீர்த்தம்
  18. சரயு தீர்த்தம்
  19. தேவ தீர்த்தம்
  20. கன்யா தீர்த்தம்

எனவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தில் குடும்பத்துடன் சென்று கலந்துக்கொண்டு மகாமக குளத்தில் நீராடி பிறந்த பிறவியின் பயனை அடைவோம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்