Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அனைத்து செல்வங்களையும் பெற மாசி மகம் பௌர்ணமி பூஜை பலன்கள் | Masi Pournami Poojai Valipadu in Tamil

Priyanka Hochumin Updated:
அனைத்து செல்வங்களையும் பெற மாசி மகம் பௌர்ணமி பூஜை பலன்கள் | Masi Pournami Poojai Valipadu in TamilRepresentative Image.

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் சிறப்பானதாக இருக்கும். அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெறும். அதே போல பௌர்ணமிக்கு என்று தனி சிறப்பு இருந்தாலும் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுவது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளைத் தான். அன்றைய தினத்தில் என்னென்ன சிறப்பு இறை வழிபாடுகள் நடைபெறும் என்று பாப்போம்.

அனைத்து செல்வங்களையும் பெற மாசி மகம் பௌர்ணமி பூஜை பலன்கள் | Masi Pournami Poojai Valipadu in TamilRepresentative Image

மாசி மகம் நேரம்

2023 ஆம் ஆண்டில் மாசி மகம் மார்ச் 6 ஆம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரம் மார்ச் 5 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணி வரை தொடரும். மார்ச் 6 ஆம் தேதி மாலை 5.39 மணி முதல் மார்ச் 7 இரவு 7.14 மணி வரை பௌர்ணமி திதிக்கான நேரம். இவை இரண்டும் மார்ச் 6 ஆம் தேதி ஒன்றாக இருப்பதால் அன்றைய தினம் மாசி மகமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து செல்வங்களையும் பெற மாசி மகம் பௌர்ணமி பூஜை பலன்கள் | Masi Pournami Poojai Valipadu in TamilRepresentative Image

மாசி தினத்தன்று மகம் பௌர்ணமி வழிபாடு

மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான், மகா விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் ஆகிய தெய்வங்கள் இருக்கும் ஆலயங்களில் விஷேச அலங்காரங்கள், அபிஷேகம், ஆராதனை, யாகங்கள் நடைபெறும். அன்றைய நாளில் விரதம் இருந்து தேவாலயங்களில் நடைபெறும் பூஜையில் கலந்துக் கொண்டு பலன்களை பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.

மேலும் அன்று சத்ய நாராயண பூஜை மற்றும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அம்மன் மற்றும் முழு சந்திரனை வழிபடுவது நன்மையைத் தரும் என்பது நம்பிக்கை.

அதே போல மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று செல்வங்கள் அதிகரிக்க அல்லது நினைத்த காரியங்கள் நிறைவேற விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்