Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

மாசி மகத்தின் பிரம்மிக்க வைக்கும் சிறப்புகள் | Masi Magam Significance in Tamil

Priyanka Hochumin Updated:
மாசி மகத்தின் பிரம்மிக்க வைக்கும் சிறப்புகள் | Masi Magam Significance in TamilRepresentative Image.

ஆன்மீக வழிபாடுகளில் ஒவ்வொரு திருவிழாவிற்கு தனி சிறப்பு உள்ளது. அவற்றுள் ஒரு விசேஷ நாள் தான் மாசி மகம். அதாவது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியுடன் வரும் தினத்தை தான் மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் புண்ணிய நதியான கங்கை நதி கலந்திருப்பதாக ஒரு ஐதீகம். ஆகையால் அன்றைய தினத்தில் புனித நீராடுவது ஏழேழு ஜென்ம பாவங்களை போக்கும் என்று நம்பப்படுகிறது. இத்திருநாளிற்கு இப்படி ஒரு சிறப்பு இருப்பதால் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மகாமகம் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

மாசி மகத்தின் பிரம்மிக்க வைக்கும் சிறப்புகள் | Masi Magam Significance in TamilRepresentative Image

மாசி மகம் நேரம்

2023 ஆம் ஆண்டில் மாசி மகம் மார்ச் 6 ஆம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரம் மார்ச் 5 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணி வரை தொடரும். மார்ச் 6 ஆம் தேதி மாலை 5.39 மணி முதல் மார்ச் 7 இரவு 7.14 மணி வரை பௌர்ணமி திதிக்கான நேரம். இவை இரண்டும் மார்ச் 6 ஆம் தேதி ஒன்றாக இருப்பதால் அன்றைய தினம் மாசி மகமாக கொண்டாடப்படுகிறது.

மாசி மகத்தின் பிரம்மிக்க வைக்கும் சிறப்புகள் | Masi Magam Significance in TamilRepresentative Image

மாசி மகம் சிறப்புகள்

மாசி மகம் தீர்த்த நீராடுதலுக்கு மிகவும் சிறப்பு மிக்கது. செய்த பாவங்கள் உங்களை விட்டு நீங்க தீர்த்த நீராடி பயன்பெறுங்கள்.

மேலும் மகம் நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்றும் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் நினைத்தது நிறைவேற பித்ருக்களுக்கு பூஜை செய்து பலன் பெறுங்கள்.

மகம் ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே, உங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் எனில் மாசி மகத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வதனால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்