Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Samayapuram Mariamman Temple Route: சமயபுரம்  மாரியம்மன் கோவில் போக எளிய வழி…

Gowthami Subramani April 18, 2023 & 11:30 [IST]
Samayapuram Mariamman Temple Route: சமயபுரம்  மாரியம்மன் கோவில் போக எளிய வழி…Representative Image.

தமிழ் கடவுள் கந்தனின் அன்னையும் ரங்கனின் தங்கையுமான ஆதிசக்திக்கு 17ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் போரில்  வெற்றி கொண்டதற்கு காணிக்கையாக உருவாக்கப்பட்ட திருத்தலமான திருச்சி சமயபுரம் கோவில் செல்வது எப்படி என்பதைக் காண்போம்.

Samayapuram Mariamman Temple Route: சமயபுரம்  மாரியம்மன் கோவில் போக எளிய வழி…Representative Image

சமயபுரம் மாரியம்மன் கோவில் (How To Go Samayapuram Kovil)

ஸ்ரீரங்கத்தில் இருந்து மிக அருகில் சுமார் 12 கீ.மீ தொலைவில் உள்ளது, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில். ஸ்ரீரங்கம் சென்று ரங்கனைத் தரிசிக்கும் பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மனின் ஆசிபெறாமல் செல்வது அரிது.  முக்கியமாக அம்மை போன்ற வியாதிகள் குணமடைய இந்த திருத்தல மூலவரான மாரியம்மனை வேண்டி நிறைவேறியதும் காணிக்கை செலுத்தும் பக்தர்கள் ஏராளமாகும், இந்த அளவு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் செல்வது எப்படி என்று யோசிக்கின்றீரா.... இல்லை எந்த நேரம் அம்மனை தரிசிக்க சரியான நேரமாக இருக்கும் என சிந்திக்கின்றீரா.... உங்கள் ஐயத்திற்கு விடையளிக்கும் வகையில் எங்கள் பதிவு துணையாக அமையும்.

Samayapuram Mariamman Temple Route: சமயபுரம்  மாரியம்மன் கோவில் போக எளிய வழி…Representative Image

தரிசன நேரம் (Samayapuram Mariamman Temple Timings)

தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம்,  காலை 6:00 மணிக்கு  தொடங்கும் உஷாத் கால பூஜைக்கு பின் காலை 8:00 மணிக்கு கால சந்தி நடைபெறும். பிற்பகல் 12:00 மணியளவில் பக்தர்கள் அம்மனுக்கு நடக்கும் உச்சி கால பூஜையை தரிசிக்கலாம், இறுதியாக மாலை 6:00 மணிக்கு நிகழும் சாயா இரட்சை பூஜையே இறுதியாகும். இந்த திருத்தலத்தில் அம்மனை தரிசிக்க இலவச தரிசனம் மட்டுமே ஆகும்.

இந்த 2023 ஆம் ஆண்டின் சமயபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா ஆனது, ஏப்ரல் 10 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 22 ஆம் நாள் முடிவடைய உள்ளது.

Samayapuram Mariamman Temple Route: சமயபுரம்  மாரியம்மன் கோவில் போக எளிய வழி…Representative Image

எப்படி செல்வது? (Samayapuram Mariamman Temple Route)

சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்க நாம் முதலில் திருச்சி வர வேண்டும், பேருந்து மார்க்கமாக பயணத்தில் சமயபுரம் பழைய பேருந்து நிலையம் வந்த பிறகு அங்கு இருந்து நாம் கோவில் வர ஆட்டோ அல்லது வாகனம் வாடகைக்கு எடுத்து அம்மன் தரிசனம் பெறலாம்.

சமயபுரம் வர இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்தால் திருச்சி ரயில் நிலையம் வர வேண்டும், அங்கு இருந்து சுமார் 4 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் ஆலயம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்