Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறந்தும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட்ராதீங்க..!| Purattasi Month 2023 Importance

Gowthami Subramani September 13, 2023 & 05:15 [IST]
மறந்தும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட்ராதீங்க..!| Purattasi Month 2023 ImportanceRepresentative Image.

தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக இருப்பது புரட்டாசி மாதம். இந்த மாதத்திற்கு உள்ள சிறப்பே தனி என்று கூறலாம்.

புரட்டாசி மாதம் என்றாலே ஒரு ஆன்மீக தத்துவம் மிக்க புனிதமான மாதங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. பெருமாளின் அனுக்கிரகம் பெற, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபடுவர். இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுதல், மதுப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாதத்தின் பெயர்ச்சி

பெருமாளைப் போற்றி வணங்கும் இந்த சிறப்பான மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணிக்கிறார். இதனால், இந்த மாதத்தில் அதிபதியான புதன், மகாவிஷ்ணுவின் சொரூபமாக இருக்கிறார். இதனால், புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாகவே கருதப்படுகிறது.

மேலும், புதன் கிரகம் முற்றிலும் சைவத்திற்கு உரிய கிரகம் ஆகும். எனவே, இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தத்தை அருந்துவது நல்லது என முன்னோர்கள் கூறுகின்றனர்.

வேண்டியதை கொடுக்கும் 'பண்ணாரி அம்மன்' கோவிலின் பிரம்பிக்க வைக்கும் வரலாற்று கதை..

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கும் சனிக்கும் உள்ள பங்கு

சனி பகவானுக்கு உரிய நாள் சனிக்கிழமை என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது நல்லது எனக் கூறுவர். இதற்கான காரணம், புரட்டாசி மாதத்தில் சனி பகவான் தன்னுடைய வலிமையை இழந்து காணப்படுவார். இதனால், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனீஸ்வரன் அருளக் கூடிய கெட்ட பலன்கள் தடுக்கப்பட்டு நன்மைகள் கிடைக்கும்.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாததற்கான அறிவியல் காரணங்கள்

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு சில அறிவியல் காரணங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை முழுவதுமாக தவிர்த்து சைவத்தை மட்டும் உண்ண வேண்டும் எனக் கூறுவர்.

இதற்கான உண்மையான காரணம் புரட்டாசி மாத சமயத்தில் வெயிலும், காற்றும் குறைந்து மழைக்காலம் தொடரும் காலமாக உள்ளது. இந்த காலம் வரை சூடாக இருந்த பூமி, மழை பொழியும் சமயத்தில் அதை ஈர்த்துக் கொண்டு புவியின் வெப்பத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும். இவ்வாறு, பூமி தன்னுள் இருக்கும் அதிக அளவிலான வெப்பத்தை வெளியில் விடுவதற்கு ஆரம்பிக்கும்.

இதனால், புரட்டாசி மாதம் வெப்பத்தை கிளப்பி விடும் நேரமாக உள்ளது.  இதன் காரணமாக, உடலுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக அமைகிறது. இதனால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் சூட்டை மேலும் அதிகரிக்கலாம் எனவும், இதனால் உடலுக்குத் தீங்கு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் எப்படி இருக்க வேண்டும்?

இதன் காரணமாகவே, நம் முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கூறி புரட்டாசி மாதத்தில் அசைவ உணவைத் தவிர்ப்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் வரும் உடல் பிரச்சனைகளைத் தவிர்க்க கோவில்களில் வழங்கப்படும் துளசி தீர்த்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து கோவில்களுக்குச் சென்று துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும் எனக் கூறுவர்.

மேலே கூறியது போல, புதன் சைவத்திற்கு உரியதாகவும், இந்த அறிவியல் காரணத்தாலும் புரட்டாசி மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்