Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபாடு செய்யும் முறை….! செல்வம் பெருகி மென்மேலும் வளர்ச்சி அடைய இத ஃபாலோப் பண்ணுங்க.....

Gowthami Subramani September 17, 2022 & 13:40 [IST]
நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபாடு செய்யும் முறை….! செல்வம் பெருகி மென்மேலும் வளர்ச்சி அடைய இத ஃபாலோப் பண்ணுங்க.....Representative Image.

நவராத்திரி ஒன்பது நாள்கள் வழிபாடு செய்யும் முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

நவராத்திரி என்றாலே ஒன்பது நாள்கள் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டி கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவராத்திரியில் துர்க்கையான பார்வதியை முதல் 3 நாள்கள் வழிபடுவர். அடுத்த மூன்று நாள்களுக்கு லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாள்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவர். இதனைத் தொடர்ந்து, 10 ஆவது நாளாக விஜய சாமூண்டீஸ்வரியை வணங்க வேண்டும்.

நவராத்திரி பண்டிகையின் முக்கியத்துவம்

நவராத்திரி வழிபடும் ஒன்பது நாள்களுமே முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. இந்த அற்புத நாள்களில் இறைசக்தியின் வடிவத்தை ஒன்றிணைந்து உணர்வதாகும். அதன் படி, துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் என்ற அரக்கனை அழிப்பர். இந்த நிகழ்வு நடந்ததை குறிப்பிடும் வகையிலே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பலதரப்பட்ட உருவங்களில் தோற்றமெடுத்து, மக்களைக் காக்கும் அன்னையின் ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்...

மூன்று தெய்வங்களின் சிறப்புகள்

துர்க்கையை வணங்குவதன் மூலம், நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழிக்கப்பட்டு மன உறுதி பெறுவர்.

லட்சுமி தேவியை வணங்குவதன் மூலம் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், கருணை, நல்ல சிந்தனைகள், உயர்ந்த பண்பாடுகள் போன்றவற்றைப் பெற முடியும்.

சரஸ்வதி தேவியை வழிபடுவதன் மூலம், ஞானம், உயர்ந்த கல்வி, கலை என அனைத்திலும் தேர்ச்சி பெறலாம்.

நவராத்திரியில் இந்த மலர்களை கொண்டே அம்பாளுக்கு பூஜை செய்ய வேண்டும்..

நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடும் முறை

முதல் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: மது கைடவர் அசுரனை அழித்த அவதாரமான மகேஸ்வரி அவதாரம்

கோலம்: அரிசி மாவின் மூலம் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

பூக்கள்: மல்லிகை, சிவப்பு நிற வில்வ, அரளி பூக்கள்

நைவேத்தியம்: சுண்டல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு வரை

பாடல் ராகம்: தோடி ராகம்

பலன்: வறுமை நீங்கி, வாழ்நாள் பெருகி சிறந்து விளங்குவர்.

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? 

இரண்டாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

கோலம்: மாவு பயன்படுத்தி கோலம் போட வேண்டும்.

பூக்கள்: முல்லை, துளசி, மஞ்சள் நிறத்தினால் ஆன கொன்றை, சாமந்தி பூ, நீல நிற சம்பங்கி பூக்கள்

நைவேத்தியம்: புளியோதரை, எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்

பாடல் ராகம்: கல்யாணி ராகம்

பலன்: நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் செயல்படும்.

நவராத்திரியில் அம்மனுக்கு 9 நாட்கள் வரை என்னென்ன பிரதாசங்கள் படைக்கலாம்...

மூன்றாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: வாராகி அம்மன் (மகிஷனை அழித்தவள்)

கோலம்: மலர் கோலம் இட வேண்டும்

பூக்கள்: செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்தல்

நைவேத்தியம்: கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்

பாடல் ராகம்: காம்போதி ராகம்

பலன்: தணதானியம் பெருகி வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: மகாலட்சுமி (சிங்காசனத்தில் தோற்றம் தரும் காட்சி)

கோலம்: அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிடுதல்

பூக்கள்: ரோஜா, செந்தாமரை, ஜாதி பூக்கள்

நைவேத்தியம்: அவல், கேசரி, தயிர் சாதம், பால் பாயாசம், கற்கண்டு, பொங்கல், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், கதம்ப சாதம்

பாடல் ராகம்: பைரவி ராகம்

பலன்: கடன் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்

ஐந்தாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: மோகினி தோற்றம் (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

கோலம்: கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.

பூக்கள்: கதம்பம், மனோரஞ்சிதம்

நைவேத்தியம்: சர்க்கரை பொங்கல், பாயாசம், கடலை பருப்பு வடை, தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்

பாடல் ராகம்: பஞ்சமாவரணை கீர்த்தனைகள், பந்துவராளி ராகம்

பலன்: நீங்கள் எதிர்பார்த்த அனைத்து செல்வங்களும் கிடைக்கும்

ஆறாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: சண்டிகா தேவி (சர்பராஜ ஆசனம்)

கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலம் இட வேண்டும்.

பூக்கள்: விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம், பாரிஜாதம்

நைவேத்தியம்: தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், தேங்காய் சாதம்

பாடல் ராகம்: நீலாம்பரி

பலன்: வெற்றி உண்டாகி, கவலைகள் நீங்கும். வீட்டில் பொருள்கள் சேரும்.

ஏழாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: சாம்பவித் துர்க்கை தோற்றம் (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலர் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

கோலம்: நறுமண மலர்களால் கோலம் இடுதல்

பூக்கள்: தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை

நைவேத்தியம்: எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல், வெண்பொங்கல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

பாடல் ராகம்: பிலஹரி ராகம்

பலன்: நீங்கள் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: நரசிம்ம தாரனி (கரும்பு வில்லுடன் கூடிய வடிவம்)

கோலம்: பத்ம கோலம்

பூக்கள்: மருதோன்றி, வெண்தாமரை, குருவாட்சி

நைவேத்தியம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்

பாடல் ராகம்: புன்னகை வராளி ராகம்

பலன்: இஷ்ட சித்தி உண்டாகும்

ஒன்பதாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: பரமேஸ்வரி, சுபத்ரா தேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

கோலம்: வாசனைப் பொடிகளால், ஆயுதம் போன்ற கோலம்

பூக்கள்: தாமரை, துளசி, வெள்ளை மலர்கள், மரிக்கொழுந்து

நைவேத்தியம்: உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை

பாடல் ராகம்: வசந்த ராக கீர்த்தனம்

பலன்: ஆயுள், ஆரோக்கியம் பெருகி, சந்ததிகள் சிறப்பாக வாழ்வர்.

வேண்டியதை கொடுக்கும் 'பண்ணாரி அம்மன்' கோவிலின் பிரம்பிக்க வைக்கும் வரலாற்று கதை..

ஒன்பதாம் நாள் நவராத்திரி வழிபடு செய்தல்

தோற்றம்: அம்பிகை (ஸ்தூல வடிவம்)

நைவேத்தியம்: காராமணி சுண்டல், பால் பாயாசம், இனிப்பு வகைகள்

பூக்கள்: வாசனை நிறைந்த பூக்கள்

பலன்: புரட்டாசி மாதத்தில் மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி தந்து நன்மை வழங்கும் சுப நாள்.

இவ்வாறு ஒன்பது தினங்களிலும், முறையாக நவராத்திரி பண்டிகை கொண்டாடி வந்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அனைத்து கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்