Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last Saturday

Gowthami Subramani September 13, 2023 & 16:15 [IST]
சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பான மாதமாகவே கருதப்படுகிறது. அதிலும் ஆடி, புரட்டாசி என்றால் ஆன்மீக வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவகையாகும். இதில், புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசி மாதம் முழுவதும், சனிக்கிழமை தோறும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டால், எத்தகைய கடன் பிரச்சனைகளையும் தீர்ந்து, கஷ்டத்திலிருந்து விடுபட்டு நன்மைகளைப் பெறுவர் என்றே கூறலாம்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

புரட்டாசி 2023 கடைசி சனிக்கிழமை

அதிலும், புரட்டாசி மாதத்தின் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதத் தவிர்த்து, சைவ உணவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த சிறப்பான மாதத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுவர். சரி. புரட்டாசியின் கடைசி சனிக்கிழமையான நாளைய தினத்தில் நாம் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இதை செய்வதன் மூலம், நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

தவறாமல் செய்ய வேண்டியவை

புரட்டாசி மாதத்தில் இதுவரை தளிகை போட்டு வழிபடவில்லை எனில், நாளை தவறாமல் தளிகை இட்டு வழிபடவும். இவ்வாறு செய்வதன் மூலம், நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் எனக் கூறப்படுகிறது. தளிகை என்றால் நிறைய சாத வகைகளைப் பெருமாளுக்குப் படைப்பதாகும். இதில் ஒரு சிலர், 11 வகையான சாதங்களைச் செய்து, மா விலக்கு போட்டு வழிபடுவர்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

கட்டாயம் இடம் பெற வேண்டியவை

11 வகை சாதங்களைச் செய்ய இயலாதவர்கள் குறைந்தது 3 சாத வகைகளை வைத்து படைக்கலாம். ஆனால், அதில் குறிப்பாக புளியோதரை சாதம் இடம் பெற்றிருக்க வேண்டும். அதே போல மாவிலக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியங்கள் நடக்கும். இவ்வாறு செய்யும் போது, நாம் ஒரு சில குறிப்பிட்ட பொருள்களையும் சேர்க்க வேண்டும். அதே போல, பானகத்தை தவறாமல் செய்ய வேண்டும்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

சஷ்டியுடன் சேர்ந்து வரும் கடைசி சனிக்கிழமை

இந்த 2023 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதத்தில் கடைசி சனிக்கிழமையான நாளை சஷ்டி தினத்தோடு சேர்ந்து வருகிறது. சஷ்டி தினத்தின் சிறப்பு முருகப் பெருமானை வழிபடுவதாகும். அதன் படி, முருகப்பெருமானை வழிபடும் போது வெற்றிலை வைத்து வழிபட்டால், அனைத்து வகையான நற்பலன்களும் கிடைக்கும்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

வெற்றிலை வைத்து வழிபடும் முறை

இவ்வாறு வெற்றிலை வைத்து வழிபடும் நாம் ஒரு சிலவற்றைச் செய்வது அவசியம். புரட்டாசி சனிக்கிழமைகளில் நாம் வழக்கமாக செய்வது போல, பூஜை அறையைச் சுத்தம் செய்து, வீட்டில் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு திலகமிட்டு, துளசி மாலை சூடி வழிபடலாம். மேலும், பூஜையறையில் சாமி வைத்திருக்கும் இடத்தில் பன்னீர் கலந்த நீரினால் சுத்தம் செய்வது அவசியமாகும்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

பெருமாளுக்கு உகந்த மண்ணால் ஆன தட்டு

பிறகு, ஒரு தட்டில் வெற்றிலை எடுத்துக் கொண்டு அதன் மேல், பாக்கு, ஏலக்காய்-3, துளசி இலை சிறிதளவு, பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு, கற்கண்டு போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பொருள்களைக் கொண்ட வெற்றிலையை மண்ணால் ஆன தட்டு அல்லது கிண்ணத்தின் மேல் வைக்க வேண்டும்.

பெருமாள் வழிபாடு என்றாலே மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்தது. இவ்வாறு மாவிளக்கில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம், அந்த தீபத்தில் பெருமாளும், லட்சுமி தேவியும் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last SaturdayRepresentative Image

வெற்றிலையை என்ன செய்வது?

மேலும், தளிகை போட்டு வழிபடும் போது அதற்குத் தேவையான சர்க்கரை, பொங்கல், எள்ளு பாயாசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டைக் கடலை சுண்டல், வாழைக்காய் பொறியல் போன்ற நெய்வைத்தியங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பூஜை முடிந்த பிறகு, வெற்றிலையை என்ன செய்வது என்று பெரும்பாலானோர்க்கு சந்தேகம் எழும். பெருமாளிடம் வேண்டி வணங்கிய அந்த வெற்றிலையை உண்பதால் நம்முடைய வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்லும் எனக் கூறுவர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்