Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57
Exclusive

புரட்டாசி ஸ்பெஷல்! பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்...! | Purattasi 2023 Special Food

Nandhinipriya Ganeshan September 13, 2023 & 17:10 [IST]
புரட்டாசி ஸ்பெஷல்! பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்...! | Purattasi 2023 Special FoodRepresentative Image.

புரட்டாசி மாதம் 2023 பிறந்துவிட்டாலே சிலர் வீடுகளில் சனிக்கிழமை தோறும் தளிகை போடுவது வழக்கம். அப்படி போடவில்லை என்றாலும் பச்சரிசி சாதம் சமைப்பார்கள். அந்தவகையில், புளி சாதம், தயிர் சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை சமைப்பார்கள். இந்தவரிசையில், பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கும் எள்ளு சாதம் சுவையாக எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். 

'நான் புரட்டாசி மாசம் கறி சாப்பிடமாட்டேன் பா' - இதுக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு?  

தேவையான பொருட்கள்:

பொடி செய்ய:

கருப்பு எள்ளு (அ) வெள்ளை எள்ளு - 4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

வர மிளகாய் - 5

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

நவராத்திரியில் அம்மனுக்கு 9 நாட்கள் வரை என்னென்ன பிரதாசங்கள் படைக்கலாம்...

தாளிப்பதற்கு:

நெய் - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

வேர்க்கடலை - 1 ஸ்பூன்

வர மிளகாய் - 1

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல் போன்ற பொருட்களை எல்லாம் போட்டு எள்ளு படபடவென பொரிந்து வரும் அளவிற்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். 

இப்போது வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். 

எள்ளு சாதம் செய்வதற்கு தேவையான பொடி தயார். இப்போது சாதத்திற்கு தேவையான பச்சரிசி சாதத்தையும் உதிரி உதிரியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புழுங்கல் அரிசியில் கூட செய்யலாம். ஆனால், நைவேத்தியமாக படைக்க பச்சரிசி தான் பயன்படுத்துவார்கள். 

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம் ரெசிபி..

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், முந்திரி பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், கருவேப்பிலை ஆகிய பொருட்களை சேர்த்து மணக்க மணக்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர், நாம் வடித்து வைத்திருக்கும் பச்சரிசி சாதத்தை இதில் போட்டு சிறிது உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு, நாம் தயாரித்து வைத்துள்ள எள்ளு பொடியில் இருந்து தேவையான அளவு தூவி நன்றாக கலந்துவிடுங்கள்.

பயன்படுத்தியது போக மீதம் பொடி இருந்தால் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். தேங்காய் சேர்த்திருப்பதால் பொடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஆனால், கொப்பரை தேங்காயை வாங்கி பயன்படுத்தினால் கெட்டுப் போகாது. 

இப்போது சாதம் ஓரளவிற்கு சூடாக வந்ததும் எள்ளுப் பொடி சாதத்தில் எல்லா இடங்களிலும்படும்படி கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான எள்ளோதரை ரெடி. புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் இந்த ரெசிபியை ட்ரைப் பண்ணி பாருங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்