Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

சனீஸ்வரர் முதன் முதலில் நீதி வழங்கியது யாருக்கு தெரியுமா? | Shani Story in Tamil

Priyanka Hochumin Updated:
சனீஸ்வரர் முதன் முதலில் நீதி வழங்கியது யாருக்கு தெரியுமா? | Shani Story in TamilRepresentative Image.

நீதி கடவுளாக உருவான சக்தி சனீஸ்வரர் அதற்காக என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறார் என்று பாப்போம். இயற்கையின் நீதி படி, எந்த ஒரு சக்தி யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நீதி வழங்க வேண்டுமோ அவர்கள் உறவற்றவராக இருக்க வேண்டும். அப்போது தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதி தவறாமல் இருப்பார்கள். எனவே, தான் சனி பகவான் பிறந்ததில் இருந்து தாயை தவிர எந்த ஒரு உறவின் நிழலிலும் வாழவில்லை. அவர்களும் இவரின் செயலை சற்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

சனீஸ்வரர் முதன் முதலில் நீதி வழங்கியது யாருக்கு தெரியுமா? | Shani Story in TamilRepresentative Image

சனி பகவான் தான் கர்ம பலன் அளிக்கும் சக்தி என்பதை தெரிந்துக்கொள்ள இந்திர தேவர், சுக்ராச்சாரியாரை பயன்படுத்தி சக்கரவியூகத்தை உருவாக்கினார். பின்னர் அதில் சனியின் தாய் சந்தியா சிக்கிக்கொண்டால் சனியின் சக்தி வெளியாகும் என்று எண்ணினர். அதே போல சனி தேவன் தான் அந்த சக்தி என்பதை தெரிந்துக்கொண்டு இந்திரன் மிகவும் மகிழ்கிறார். இந்த பிரச்சனைக்கு காரணமானவர்களை தண்டிக்க முடிவெடுத்த சனி அதற்கான தேடுதலை ஆரம்பித்தார். இந்திரனோ அனைத்து பழியையும் அசுரர்களின் குருவான சுக்லாச்சாரியார் மீது சுமத்தினார். இதற்கு ஒப்புக்கொள்ளாத சனி சூரிய தேவனிடம் தேவர் சபையை நடத்தும் படி கேட்டுக்கொண்டார்.

சனீஸ்வரர் முதன் முதலில் நீதி வழங்கியது யாருக்கு தெரியுமா? | Shani Story in TamilRepresentative Image

ஆனால் சூரிய தேவரோ சனியை அந்த சபைக்கு வர கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கு கட்டுப்பாடு சந்தியாவும் சனியை அனுப்ப மறுத்திவிட்டார். ஆனால் இதில் இருக்கும் மறைமுக காரணத்தை உணர்ந்துக்கொண்ட சந்தியா சனியை சபைக்கு அனுப்பிவிட்டார். அந்த சபையானது தேவரிஷி நாரதர் தலைமையில் நடைபெற்றது. தேவர்கள் அனைவரையும் சுக்லாச்சாரியார் தான் குற்றவாளி என்று இந்திரன் நம்ப வைத்துவிட்டார். ஆனால் சனி பகவானை அதனை தன்னுடைய வாதத் திறமையால் மாற்றி இந்திரன் தான் குற்றவாளி என்று நிரூபித்துவிட்டார்.

சனீஸ்வரர் முதன் முதலில் நீதி வழங்கியது யாருக்கு தெரியுமா? | Shani Story in TamilRepresentative Image

தன்னுடைய முதல் விவாதத்திலையே சனி பகவான் நீதி வழங்கி மூவேந்தர்களை மகிழ்ச்சியடைய வைத்துவிட்டார். இருப்பினும் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அச்சுறுத்தல் சனீஸ்வரர் தாயின் மீது கொண்ட அளவில்லாத பாசம். நீதி வழங்குபகவன் உறவற்றவராக இருக்க வேண்டும் என்று கருதினர். பின்னர் தன்னுடைய கர்ம பலன் அளிக்கும் பாதையில் சனி பகவான் எடுத்து வைத்த முதல் அடியில் வெற்றிப் பெற்றுவிட்டார். அதே போல தன்னுடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு அதே பாதையில் செல்லும் காலம் வரும் என்று திடமாக நம்பினார்கள் மும்மூர்த்திகள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்