Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் சீரடி சாய்பாபாவின் 11 உறுதிமொழிகள்… இப்படி படித்தால் வெற்றி நிச்சயம்...

Gowthami Subramani August 17, 2022 & 17:40 [IST]
உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் சீரடி சாய்பாபாவின் 11 உறுதிமொழிகள்… இப்படி படித்தால் வெற்றி நிச்சயம்...Representative Image.

சீரடி சாய்பாபாவின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் 11 உறுதிமொழிகளைப் பற்றி விளக்கப்பட்டது. சாய்பாபாவின் அதிசயங்கள் ஏராளம்.. அவரின் அற்புதங்களைச் சொல்வதற்கு நமக்கு நேரம் போதாது. எண்ணிலடங்கா பக்தியுடன், காலை எழும் போது முதல் இரவில் தூங்கும் போது வரை அனைத்தும் சாய்பாபாவின் அற்புதமே என எண்ணி வாழ்வோர் பலர். அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பிக்கப்படுகிறது. வியாழன் தோறும், சாய்பாபாவிற்கு விரதம் இருந்து பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் வணங்கினால், நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஷீரடி சாய்பாபாவின் 11 உறுதி மொழிகள்

ஷீரடி சாய்பாபாவின் இந்த உறுதி மொழிகளைக் கூறி முழு மனதோடு அவரை வணங்கினால், நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.  சாய்பாபாவின் 11 உறுதிமொழிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.


ஒன்பது வியாழக்கிழமைகள் இப்படி விரதம் இருந்தால், எண்ணிய அனைத்தும் நடக்கும்…!


  1. ஷீர்டியில் காலடி வைக்கும் பக்தனுக்கு வரக்கூடிய ஆபத்துகள் அனைத்தும் விலகிவிடும்.
  2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்துத் துக்கங்களையும் நான் போக்குவேன்.
  3. திடமான பக்தி மற்றும் நம்பிக்கையுடன், விசுவாசத்துடனும் யாசிப்பவன் ஆசையை எனது சமாதி பூர்த்தி செய்யும்.
  4. இந்த உலகை விட்டு என் பூத உடல் மறைந்த போதிலும், பக்தர்கள் என்னை அழைத்த உடனேயே ஓடி வருவேன்.
  5. இன்னும் நான் உயிரோடு இருக்கிறே என்று எப்போதும் உணர வேண்டும். இதனை சாத்தியம் என்று உணர்ந்து, அதன் அனுபவம் பெறுவீர்.
  6. என்னை சரணடைந்த பின் வெறும் கையோடு திரும்புபவன் யாரும் இருக்கக் கூடாது. அப்படி எந்த ஒரு பக்தன் இருப்பானாயின், அவனை எனக்கு காண்பியுங்கள்.
  7. பக்தர்கள் என்னை எந்த அளவிலான பக்தியுடன் உணர்கிறார்களோ, அப்படிப்பட்ட அனுபவங்களையே அவனுக்குத் தருவேன்.
  8. எப்பொழுதும், உங்களின் சுமைகளை நான் சுமக்கிறேன். என் வாக்கு என்றுமே பொய்யாவதில்லை.
  9. நீங்கள் கேட்ட அனைத்தையும் நான் கொடுப்பேன். என் உதவியையும், அருளையும் அள்ளித் தர நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
  10. பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்ற பக்தர்களுக்கு நான் கடன் பட்டவனாய் கருதப்படுகிறேன்.
  11. என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியம் பெற்றவன் ஆவான்.

இத்தகைய அருள் மிகுந்த உறுதிமொழிகளைக் கூறுவது மட்டுமல்லாமல், அவற்றை மனதிலும் நிறுத்தி செயல்பட வேண்டும்.


Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?


மேலும், இந்த உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளவாறு பக்தர்கள் என்றென்றும் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் சாய்பாபாவை வணங்கினால், எந்த துன்பமும் அவர்களுக்கு நேராது என்பது உண்மை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba 11 Promises in Tamil | Sai Baba 11 Promises Tamil | Sai Baba 11 Promises | Shirdi Sai Baba Promises in Tamil | Sai Baba 11 Assurances in Tamil | Sai Baba 11 Assurances | Shirdi Sai Baba 11 Assurances in Tamil | Promises of Shirdi Sai Baba to devotees | Shirdi Sai Baba Promises in Tamil PDF | Shirdi Sai Baba Promises in Tamil PDF Free Download | Shirdi Sai Baba Promises in Tamil lyrics | Shirdi Sai Baba Promises in Tamil PDF Download | Shirdi Sai Baba Promises | Sai Baba prayer quotes | Sai Baba how to pray | Sai Baba sayings quotes | Sai Baba birthday quotes | Sai Baba fasting procedure | Sai Baba forgiveness quotes | Sai Baba quotes in english


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்