Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் புத்தாண்டு 2023 வரலாறு மற்றும் முக்கியத்தும் | Tamil New Year 2023 History

Priyanka Hochumin Updated:
தமிழ் புத்தாண்டு 2023 வரலாறு மற்றும் முக்கியத்தும் | Tamil New Year 2023 HistoryRepresentative Image.

உலகின் முதல் மூத்த மொழி தமிழ். அப்பேற்பட்ட பெருமையுடன் இருக்கும் தமிழ் மொழியை தங்கள் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் பண்பாடு, கலை, சமூகம் மற்றும் அறிவியல் குறித்த வரலாறு இன்றளவும் அனைவரையும் பிரம்மிக்க வைக்கின்றனது. இதில் முக்கியமாக கருதப்படும் தமிழ் புத்தாண்டின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு 2023 வரலாறு மற்றும் முக்கியத்தும் | Tamil New Year 2023 HistoryRepresentative Image

தமிழ் புத்தாண்டு வரலாறு

தமிழர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என்றால், பூமியை சூரியன் ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றன. இதனை மையமாக வைத்து ஒரு வருடத்தின் கால அளவு கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆன்மிகம் வழியாக பார்க்க வேண்டும் என்றால், சூரிய மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் முதல் ஆண்டு என்றும், மீன ராசியில் வெளியே வருவதை இறுதி ஆண்டு என்று வைத்து தமிழ் புத்தாண்டு கணிக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு 2023 வரலாறு மற்றும் முக்கியத்தும் | Tamil New Year 2023 HistoryRepresentative Image

தமிழ் நாட்காட்டி

தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளை ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சி காலம் புத்தாண்டு காலமாக மக்கள் கருதினர். அவர்கள் ஆட்சி செய்த நேரத்தில் தமிழ் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.  மேலும் தமிழ் நாட்காட்டியின் கால அளவு சீரானது என்பதால், அதன் படி சித்திரை மாதத்தை முதல் மாதமாக கருதப்பட ஆரம்பித்தனர். இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு 2023 வரலாறு மற்றும் முக்கியத்தும் | Tamil New Year 2023 HistoryRepresentative Image

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் வண்ண நிறங்களால் கோலம் போட்டு, வீட்டை அலங்கரித்து மகிழ்வார்கள். அன்றைய தினம் தலவாழை விருந்து சமைத்து சொந்த பந்தம், நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடுவார்கள். மேலும் அன்றைக்கான ஸ்பெஷல் மாங்காய் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். அது எதற்காக என்றால், அந்த உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் போன்ற அனைத்து சுவையின் கலவையாக. இதன் மூலம் இந்த தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வரும் நாட்களில் சந்தோசம், சோகம் என்று எல்லாம் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்று பொருள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்