Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பௌர்ணமி நாளின் மகிமைகள்..! | Tamil Month Pournami

Priyanka Hochumin Updated:
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பௌர்ணமி நாளின் மகிமைகள்..! | Tamil Month PournamiRepresentative Image.

இந்த உலகின் மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரமாக திகழ்வது நமது தமிழ் கலாச்சாரம். அந்த காலகட்டங்களில் ஏனைய கலாச்சாரங்கள் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை ஆராயத் தொடங்கினர். ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கிரகங்களை மிகவும் துல்லியமாக கணித்தனர். அதற்கான பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பும் முக்கியத்துவமும் தான்.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பௌர்ணமி நாளின் மகிமைகள்..! | Tamil Month PournamiRepresentative Image

சித்ரா பௌர்ணமி

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் 60 வருட சுழற்சியைக் கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதம் தொடங்கும். அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியை சித்ரா பௌர்ணமி என்று கருதப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்துடன் கொண்டாடும் சித்ரா பௌர்ணமி சித்திரகுப்தருக்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  திருவண்ணாமலையில் பெரும் விழாவாக மக்கள்கொண்டாடுகின்றனர்.  

வைகாசி விசாகம்

துலாம் மற்றும் விருச்சிக ராசியான விசாக நட்சத்திரத்தை பிரதிபலிக்கின்றது தமிழ் மாதத்தின் இரண்டாம் மாதமான வைகாசி. இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. புராணங்களின் அடிப்படையில் சிவபெருமானின் தீவிர அசுர பக்தன் கடுமையான தவத்தால் சாகா வரத்தை பெற்றான். வரம் பெற்றதும் பல தீய விஷயங்களை செய்ய ஆரம்பித்தான். இவனை தடுக்க சிவனின் குழந்தையால் தான் முடியும். அப்படி சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கும் முருகன் பிறந்தார். அந்நாளை தான் வைகாசி விசாகம் என்று கொண்டாடுகிறோம்.

ஆனி அனுஷம்

ஆனி மாதத்தில் அனுஷம் நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளானது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த கோவிலில் சிவன் மற்றும் பார்வதி தேவி நெல்லையப்பர் மற்றும் காந்திமதியாக எழுந்தருளியுள்ளனர். ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று அவர்கள் அலங்கரிக்கப்பட்டு தேரில் பவனி வருவார்கள்.

ஆடி பூரம்

பெண் கடவுளுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஆடி பூரமாக என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் மக்களை காப்பதற்காக சக்தி தேவி வருவதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் இந்நாள் வெள்ளிக்கிழமையில் வருவது எண்ணற்ற சிறப்புக்களும் விஷேசங்களையும் கொண்டது.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பௌர்ணமி நாளின் மகிமைகள்..! | Tamil Month PournamiRepresentative Image

ஆவணி அவிட்டம்

முழுக்க முழுக்க திருவிழா மற்றும் திருமணத்திற்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ராக்கி பூர்ணிமா, கஜாரி நவமி, நரியால் பூர்ணிமா, பவித்ரோப்பனா, ஓணம் என்று பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது. பிராமணர்களுக்கு இந்த மாதம் மிகவும் மிகவும் புனிதமானது மாதமாகும். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் மாதமாகவும் திகழ்கிறது.

புரட்டாசி பூரட்டாதி

தமிழ் மாதத்தின் ஆறாவது மாதமான புரட்டாசி பௌர்ணமி பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது. இந்த மாதம் முற்றிலும் கடவும் வழிபாட்டிற்கான மாதமாகும். அதிலும் சனிக்கிழமைகள் பல சிறப்புகளை கொண்டுள்ளது. மேலும் மும்மூர்த்திகளுள் ஒருவரான பெருமாள் எழுந்தருளிய திருப்பதி கோவிலில் பிரமோர்த்சவம் இந்த மாதத்தில் தான் நடைபெறும். 

ஐப்பசி அஸ்வினி

ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில் வருகிறது. இந்த மாதம் சிவத்தலங்களில் மிகவும் விசேஷமாக வாய்ந்ததாக இருக்கும். நம்மை காக்கும் சிவபெருமானுக்கு நன்றி கூறும் வகையில் அன்னாபிஷேகம் நடத்தப்படும். அதனை பார்க்கும் மக்களுக்கு அனைத்து புண்ணியமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று தான் நாம் கார்த்திகை தீபம் கொண்டாடுகிறோம். மேலும் சிவபெருமான் தீப்பிழம்பாக மாறிய இந்நாளை மகாதீப நாளாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியஅவ்வில் குறிப்பாக தமிழ் நாட்டில் இது ஒரு முக்கியமாக விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பௌர்ணமி நாளின் மகிமைகள்..! | Tamil Month PournamiRepresentative Image

மார்கழி பௌர்ணமி

சூரிய பகவான் தனுசு ராசியில் இருக்கும் காலத்தை தனுர் மாதம் அல்லது மார்கழி மாதம் என்று கிருஷ்ணர் கூறியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பேற்பட்ட மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமியானது மிருகசீரிஷம் அல்லது திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்தம் அப்போது பெருமாளை வணங்கினால் அவை அப்படி நடக்கும் என்பது ஐதீகம். இந்த மதத்தின் மற்றொரு சிறப்பு வைகுண்ட ஏகாதி பெரு விழாவாகும்.

தைப்பூசம்

தமிழகத்தில் மிகமுக்கியமான மாதமானது தான் தை. இந்த மாதத்தில் பல விஷேச நாட்கள் கொண்டாடப்படுகிறது. தை திருநாள் பொங்கல் இந்த மாதத்தில் தான் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் அரக்கன் தாரகாசுரனை முருகன் வதம் செய்த நாளை தைப்பூசம் என்று கொண்டாடுவதும் இந்த மாதத்தில் தான்.

மாசி மகம்

மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியை மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்களில் இது மிகவும் சிறப்பான நட்சத்திரமாகும். பூமியில் வாழும் மக்கள் தங்கள் ஆன்மாவை தூய்மைப் படுத்தும் காலமாக கருதப்படுகிறது. மாசி மகம் அன்று பிறக்கும் குழந்தைகள் ராஜயோகம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. 

பங்குனி உத்திரம்

தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதம் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை மற்றும் பல கடவுள்கள் திருமணம் செய்துக்கொண்ட மாதமாகும். இந்த மாதம் முழுக்க கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்