Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தை அமாவாசை 2023 எப்போது வருகிறது? திதி கொடுப்பதற்கான நேரம்? | Thai Amavasai 2023 Date and Timings

Nandhinipriya Ganeshan Updated:
தை அமாவாசை 2023 எப்போது வருகிறது? திதி கொடுப்பதற்கான நேரம்? | Thai Amavasai 2023 Date and TimingsRepresentative Image.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள் அமாவாசை. இருப்பினும், தமிழ் மாதத்தில் வரக்கூடிய சில அமாவாசை நாட்கள் மிகவும் விஷேசமானது. அந்தவகையில், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாட்களில் என்ன செய்தால் நல்லது என்று பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

அமாவாசை என்றாலே திதி கொடுக்க உகந்த நாள் அதிலும் தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களின் முழு ஆசியும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்தவகையில், தை அமாவாசை நாளில் விரதம் இருந்து அவர்கள் ஆத்ம சாந்திக்காக தர்ப்பண பூஜை செய்ய வேண்டும். தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களின் தாகமும், பசியும் அதிகரிக்குமாம். அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை கொடுப்பதே தர்ப்பணம் ஆகும்.

தை அமாவாசை 2023 எப்போது வருகிறது? திதி கொடுப்பதற்கான நேரம்? | Thai Amavasai 2023 Date and TimingsRepresentative Image

2023ல் தை அமாவாசை தை 8 ஆம் தேதி (ஜனவரி 21) சனிக்கிழமை வருகிறது. ஜனவரி 21 ஆம் தேதி காலை 06.17 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி அதிகாலை 02.22 மணிக்கு முடிவடைகிறது. அதனால், ஜனவரி 21 ஆம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் செல்வமும் புண்ணியமும் கிடைக்கும். எனவே, தை அமாவாசை நாள் காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். மேலும், ராகு, எமகண்ட காலத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்