Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறை

UDHAYA KUMAR Updated:
Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image.

இறந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகிய தர்ப்பணம், நம் சந்ததிகள் வாழையடி வாழையாக வாழ்ந்து செழிக்க வளம் கொழிக்க வழங்கப்படுவது. இதனை தை அமாவாசையில் செய்வது மிகச் சிறப்பு.  இதனால் ஏற்படும் நன்மைகள் மிக அதிகம். 

வாருங்கள். தை அமாவாசை தர்ப்பணம் 2023 பற்றிய அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கலாம். 

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image

எப்போது வருகிறது | when is thai amavasai 2023

வரும் ஜனவரி 21ம் தேதி தை மாதத்தில் நிகழும் அமாவாசையில் தங்கள் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடவேண்டும்.  சூரியன், சந்திரன் இரண்டும் ஒரே ராசியில் இணைவதைத்தான் அமாவாசை திதி என்கிறார்கள். 

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image

ஏன் கொடுக்க வேண்டும் | why should we give tharpanam

ஆண்டு முழுக்க வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுபவர்களுக்கு வீட்டில் அமைதி நிலைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள். 

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image

தர்ப்பணம் செய்வதின் நன்மைகள் | Importance of Amavasya Tharpanam

நம் முன்னோர்களில் பலர் இருப்பார்கள். அவர்களின் இறந்த தேதி நமக்கு சரியாக நினைவிருக்காது. அப்பா, தாத்தா இன்னும் சிலருக்கு பூட்டன் வரை கூட நினைவிருந்தால் ஆச்சர்யம். ஆனால் எல்லாருக்கும் அப்படி நினைவிருக்காது.  இவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் வாழ்த்து நமக்கு எப்போதும் இருக்கும் என்பதே தொன்நம்பிக்கை. 

குலதெய்வமும் ஒரு வகையில் நம் முன்னோர்களே. குல தெய்வ கோவிலுக்கு மாதம் ஒருமுறை அல்லது குறைந்தது வருடம் ஒருமுறையாவது போய் வர வேண்டும் என்பது எப்படி கட்டாயமோ அதுமாதிரிதான் அமாவசைக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதும் கட்டாயம். 

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image

தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம் | amavasya tharpanam timings

தை அமாவாசை நாளில் காலை 6.17 மணி முதல் நள்ளிரவு 2.22 மணி வரையில் தர்ப்பணம் அளிக்க ஏற்ற நேரமாகும். தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் வேதனையில் அல்லல்பட்ட முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என நம்பப்படுகிறது. 

ராகுகாலம், எமகண்டம் தவிர்த்துவிட்டு மதிய நேரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

Thai Amavasai 2023: தை அமாவாசை 2023 தர்ப்பணம் செய்யும் முறைRepresentative Image

என்ன தானம் கொடுக்கலாம் | what to donate on amavasya day

கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் உள்ளிட்டவற்றை தானமாக கொடுக்கலாம்.  இதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவர். அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு ஏழை எளியவர்களுக்கும் தானம் கொடுத்தால் சீரும் சிறப்புமாக வாழ்க்கை வளமாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்