Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in Tamil

Priyanka Hochumin Updated:
எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in TamilRepresentative Image.

நம்முடைய வாழ்வில் ஏதேனும் துன்பங்கள் துயரங்கள் நேர்ந்தால் அதற்கு காரணம் சனி பகவான் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அவர் எந்த அளவிற்கு அனைவரையும் நேசிப்பார் என்று நமக்குத் தெரியாது. கஷ்டப்படுபவர்களுடன் சேர்ந்து அதற்கான பலன் அளிப்பவருக்கும் வேதனை இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புராணங்களின் அடிப்படையில் சனி பகவான் பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in TamilRepresentative Image

பிரபஞ்சத்தில் அவதரித்த புது சக்தி

பூமி உருவாவதற்கு முன்பு மூவேந்தர்களின் பிள்ளைகளான தேவர்கள் மற்றும் அசுரர்கள் இடையே எப்போதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும். தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் அசுரர்களின் தலைவன் சுக்ராச்சாரியார் தலைமையிலும் போர் புரிந்தனர். எனவே, இவர்களின் இந்த செயலால் மிகவும் கோபமடைந்த மும்மூர்த்திகள் ஒரு புது சக்தியை உருவாக்கினர். அந்த சக்தி பெற்றோர், சகோதரர், குடும்பம் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் அவரவர்களின் கர்ம பலனை அளிப்பார் என்று அனைவரிடமும் தெரிவித்தனர். அந்த புது சக்தி பிறந்த இடம், பிரபஞ்சத்திற்கு ஒளி கொடுக்கும் சூரிய லோகத்தில் அவதரித்தது.

எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in TamilRepresentative Image

சூரியனுக்கு நிகழ்ந்த கிரகணம் 

தேவி சந்தியா சூரிய பகவானின் ஒளியை தாங்க முடியாததால் தன்னுடைய நிழலுக்கு உயிர் தந்து சாயா என்று பெயர் சூட்டினார். அவரை தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளை  பார்த்துக்கொள்ளும் மாறி கூறிவிட்டு கடும் தவத்தை மேற்கொள்ள சென்று விட்டார். அவர் சென்ற சில வருடங்களில் சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தது தான் அந்த புதிய சக்தி.

ஆனால் சூரிய தேவரோ அந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ள வில்லை. காரணம் வெளிச்சம் நிறைந்த எனக்கு ஒளி இழந்த குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று தவறாக எண்ணுகிறார். தன்னுடைய தாயை துன்புறுத்திய சூரிய பகவானுக்கு அவரின் கர்ம வினையை பிறந்த குழந்தையான புது சக்தி அளிக்கிறது. எனவே, சூரிய பகவான் கடுமையான கிரகணத்தில் சூழ்ந்து விடுபடுகிறார்.

எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in TamilRepresentative Image

எதனால் சனி என்ற பெயர்?

அவரவரின் கர்மத்தை அளிப்பதார்த்தற்காக பிறப்பெடுத்த சனி பகவானுக்கு எதனால் இந்த பெயர் வந்தது தெரியுமா? முதலில் ஒருவருக்கு நீதி அல்லது கர்ம பலனை அளிக்க நீண்ட காலம் எடுக்கும். மேலும் எப்படி ஒரு மரம் பூவாகி கனியை தருவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளுமோ அதே போல தான் கர்மத்தை அளிப்பதற்கும் காலம் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இவை அனைத்தும் சனைச்சர என்ற மூலிகையின் அம்சமாகும். இவற்றின் அடிப்படையில் தான் அவருக்கும் சனி என்று பெயர் சூட்டப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்