Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? | Tuesday Murugan Viratham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? | Tuesday Murugan Viratham in TamilRepresentative Image.

தமிழ் கடவுளான முருகப் பெருகானுக்கு வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம்என்று 3 விரதங்கள் இருக்கின்றன. இதில் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. இவற்றில் செவ்வாய்கிழமைகளில் விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன? என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? | Tuesday Murugan Viratham in TamilRepresentative Image

செவ்வாய்கிழமை விரதம்:

நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியானவர் முருகப் பெருமான், அதனால் தான் முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய்கிழமை விளங்குகிறது. முருகப் பெருமானுக்கு உகந்த இந்த நாளில் விரதம் இருப்பதால் குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி, செல்வம் என அனைத்தும் தேடி வரும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 9 செவ்வாய்கிழமைகள் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக குறையும். 

செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? | Tuesday Murugan Viratham in TamilRepresentative Image

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் முறை:

செவ்வாய்கிழமை தோறும் காலையில் எழுந்ததும் நீராடி முடித்து முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்துக் கொள்ளுங்கள். பின்னர், அருகில் உள்ள முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று முதலில் முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு தான் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். 

நாம் விரதம் இருக்குபோது வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. வீட்டுக்கு வந்து வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்க வேண்டும். 

செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? | Tuesday Murugan Viratham in TamilRepresentative Image

கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய பாடல்களை பாடலாம். பின்னர், மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 

கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, வீட்டில் வந்தும் முருகப் பெருமானுக்கு பூஜை வழிபடுவதும் நல்லது. வீட்டு பூஜை அறையில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமானின் படத்தை வைத்து வணங்குவது நல்லது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்