Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,057.52
-342.26sensex(-0.47%)
நிஃப்டி22,183.75
-88.75sensex(-0.40%)
USD
81.57
Exclusive

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 Potri

Gowthami Subramani Updated:
கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image.

கல்விக்கடவுளாக விளங்குபவரே தட்சிணாமூர்த்தி ஆவார். தட்சிணாமூர்த்தியை வணங்கினால், நல்ல அறிவாற்றலுடன் கூடிய சிந்தனை கிடைக்கும் என்றே கூறுவர். இதன் மூலம், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். இது அவர்களுக்கு நம்பிக்கையையும், படிப்பாற்றலையும் வழங்கி சிறப்பிக்கக் கூடியதாக அமைகிறது. எனவே, தட்சிணாமூர்த்தியை வணங்கி போற்றக் கூடிய 108 தட்சிணாமூர்த்தி போற்றிகள் பற்றி இதில் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

ஓம் அறிவுருவே போற்றி

ஓம் அழிவிலானே போற்றி

ஓம் அடைக்கலமே போற்றி

ஓம் அருளாளனே போற்றி

ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

ஓம் அடியாரன்பனே போற்றி

ஓம் அகத்துறைபவனே போற்றி

ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

ஓம் அற்புதனே போற்றி

ஓம் அபயகரத்தனே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி

ஓம் ஆன்மீகநாதனே போற்றி

ஓம் ஆச்சாரியனே போற்றி

ஓம் ஆசாரக்காவலே போற்றி

ஓம் ஆக்கியனே போற்றி

ஓம் ஆதரிப்பவனே போற்றி

ஓம் ஆதிபகவனே போற்றி

ஓம் ஆதாரமே போற்றி

ஓம் ஆழ்நிலையானே போற்றி

ஓம் ஆனந்த உருவே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் இருள்கொடுப்பவனே போற்றி

ஓம் இருமைநீக்குபவனே போற்றி

ஓம் இசையில் திளைப்பவனே போற்றி

ஓம் ஈடேற்றுபவனே போற்றி

ஓம் உய்யவழியே போற்றி

ஓம் ஊழிக்காப்பே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எளியோர்க்காவலே போற்றி

ஓம் ஏகாந்தனே போற்றி

ஓம் ஏடேந்தியவ்னே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

ஓம் ஓங்காரநாதமே போற்றி

ஓம் கயிலை நாதனே போற்றி

ஓம் கங்காதரனே போற்றி

ஓம் கலையரசே போற்றி

ஓம் கருணைக்கடலே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் சதாசிவனே போற்றி

ஓம் சச்சிதானந்தமே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் சாந்தரூபனே போற்றி

ஓம் சாமப்பிரியனே போற்றி

ஓம் சித்தர்குருவே போற்றி

ஓம் சித்தியளிப்பவனே போற்றி

ஓம் சுயம்புவே போற்றி

ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

ஓம் ஞானமே போற்றி

ஓம் ஞானியே போற்றி

ஓம் ஞானநாயகனே போற்றி

ஓம் ஞானோபதேசியே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் தவசீலனே போற்றி

ஓம் தனிப்பொருளே போற்றி

ஓம் திருவுருவே போற்றி

ஓம் தியானேஸ்வரனே போற்றி

ஓம் தீரனே போற்றி

ஓம் தீதழிப்பவனே போற்றி

ஓம் துணையே போற்றி

ஓம் தூயவனே போற்றி

ஓம் தேவாதிதேவனே போற்றி

ஓம் தேவருமறியாசிவனே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் நன்னெறிக்காவலே போற்றி

ஓம் நல்யாகஇலக்கே போற்றி

ஓம் நாகப்புரியோனே போற்றி

ஓம் நான்மறைப்பொருளே போற்றி

ஓம் நிலமனே போற்றி

ஓம் நிறைந்தவனே போற்றி

ஓம் நிலவாணியனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி

ஓம் நோய்தீர்ப்பவனே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் பசுபதியே போற்றி

ஓம் பரப்பிரம்மனே போற்றி

ஓம் பிரம்மச்சாரியே போற்றி

ஓம் பிறப்பறுப்போனே போற்றி

ஓம் பேறளிப்பவனே போற்றி

ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி

ஓம் பொன்னம்பலனே போற்றி

ஓம் போற்றப்படுவனே போற்றி

ஓம் மறைகடந்தவனே போற்றி

ஓம் மறையாப்பொருளே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் மஹேசுவரனே போற்றி

ஓம் மங்கலமளிப்பவனே போற்றி

ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி

ஓம் மாமுனியே போற்றி

ஓம் மீட்பவனே போற்றி

ஓம் முன்னவனே போற்றி

ஓம் முடிவிலானே போற்றி

ஓம் முக்கண்ணனே போற்றி

ஓம் மும்மலமறுப்பவனே போற்றி

ஓம் முனீஸ்வரனே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் முக்தியளிப்பவனே போற்றி

ஓம் மூலப்பொருளே போற்றி

ஓம் மூர்த்தியே போற்றி

ஓம் மோஹம்தீர்ப்பவனே போற்றி

ஓம் மோனசக்தியே போற்றி

ஓம் மௌனஉபதேசியே போற்றி

ஓம் மேதாதட்சணாமூர்த்தியே போற்றி

ஓம் யோகநாயகனே போற்றி

ஓம் யோகதட்சணாமூர்த்தியே போற்றி

ஓம் யமபயமழிப்பவனே போற்றி

கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள் | Dakshinamurthy 108 PotriRepresentative Image

ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி

ஓம் வித்தகனே போற்றி

ஓம் விரிசடையனே போற்றி

ஓம் வில்லவப்பிரியனே போற்றி

ஓம் வினையறுப்பவனே போற்றி

ஓம் விஸ்வரூபனே போற்றி

ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்