Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

விஷு 2023 பண்டிகையின் வரலாறு, சிறப்பு தெரியுமா? | Why is Vishu 2023 Celebrated in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
விஷு 2023 பண்டிகையின் வரலாறு, சிறப்பு தெரியுமா? | Why is Vishu 2023 Celebrated in TamilRepresentative Image.

சித்திரை முதல் நாளான 'தமிழ் வருடப்புறப்பு' சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சிகரமனாதாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக வீட்டில் கனி காணுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதை "சித்திரை கனி காணுதல்" பண்டிகை என்று சொல்லுவார்கள். அதேப்போல், கேரளாவில் இப்பண்டிகை "சித்திரை விஷு" என்று ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

விஷு 2023 பண்டிகையின் வரலாறு, சிறப்பு தெரியுமா? | Why is Vishu 2023 Celebrated in TamilRepresentative Image

விஷு பண்டிகை:

"விஷு" என்பது கேரள மக்களாலும், கர்நாடகாவின் துளு நாடு பகுதியிலும், பாண்டிச்சேரியின் மாஹே மாவட்டத்திலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மலையாள நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமான மேடத்தின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் விஷு கொண்டாடப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் விஷு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. கேரளாவில் விஷு பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கப்படும். நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்தது இந்த (விசு) நாளில்தான் என்று நம்பப்படுகிறது. 

விஷு 2023 பண்டிகையின் வரலாறு, சிறப்பு தெரியுமா? | Why is Vishu 2023 Celebrated in TamilRepresentative Image

விஷு கனி தரிசனம்:

நாட்டில் வசந்த காலம் மற்றும் அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விஷு கொண்டாடப்படுகிறது. விஷு தினத்தின் முதல்நாள் இரவிலேயே அரிசி, தங்க நகைகள், வெள்ளரி, பலாப்பழம், நாணயங்கள், கரன்சி நோட்டுகள், தென்னம்பூ, பொன் மழை மலர் (கொன்றை பூ) ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்து, நடுவில் விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் கிருஷ்ணரின் சிலையை வைத்து அலங்கரித்து கொள்வார்கள். பின்னர், விஷு நாளன்று விடியற்காலையில் எழுந்தவுடன் விஷு கனியை பார்ப்பார்கள். விஷு கனியை தரிசனம் செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியுடனும், மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

விஷு 2023 பண்டிகையின் வரலாறு, சிறப்பு தெரியுமா? | Why is Vishu 2023 Celebrated in TamilRepresentative Image

விஷு கொண்டாட்டங்கள்:

விஷு கனி மற்றும் அலங்காரங்களைக் காண குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களை மூடிக்கொண்டு விஷு கனி அலங்கரிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். ஒரு சில இடங்களில் விஷூ பண்டிகையில் குழந்தைகள் பட்டாசு வெடித்தும் கொண்டுவார்கள். கேரள மக்கள் காலை வேளையில் காணிக்கை செலுத்தும் போது முதலில் பார்ப்பது லாபர்னம் மரத்தை தான். அதன் பிறகு, உணவுகள் தயாரிக்கப்பட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் திருவிழா ரொம்ப விஷேசமாகக் கொண்டாடப்படும். இதுவே விஷு பண்டிகை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்