Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023

Gowthami Subramani Updated:
சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023Representative Image.

தமிழ் மாதமான சித்திரை திருநாளானது தமிழ் மக்கள் அனைவரும் அன்போடு கொண்டாடப்படும் திருநாளாகும். தமிழர்கள் அனைவரும் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணி, இந்த நன்னாளில் தானம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் செய்வர். அவற்றில் கனி காணுதல் என்பது வழக்கம். கனி பார்ப்பது என்பது காலையில் பழங்கள், நகைகள், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்டவற்றை தட்டில் வைத்து அதிகாலையில் பார்ப்பது ஆகும். இவற்றை எளிதாக வீட்டிலேயே செய்யலாம் என்பது பற்றி இதில் காணலாம்.

சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023Representative Image

கனி காணுதலை எப்படி வீட்டிலேயே எளிதாக கடைபிடிக்கலாம்?

சித்திரைத் திருநாளாம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, புதிய கண்ணாடியை பூஜை அறையில் வைக்க வேண்டும். அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு கண்ணாடியைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

பின், பூஜைக்குத் தேவையான பொருள்களை முந்தையை நாளே தயார் செய்து வைத்தல் வேண்டும்.

பூஜை அறையை சுத்தமாக முந்தைய நாளே தயாராக வைக்க வேண்டும்.

அதன் பின், எடுத்து வைத்த கண்ணாடிக்கு மஞ்சள், குங்குமம் போன்ற திலகம் இட்டு மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023Representative Image

முந்தைய நாளே ஒரு பெரிய தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு, அதில் முக்கனிகள் இடம்பெற்றிருக்குமாறு வைக்க வேண்டும். அதன் படி மா, பலா, வாழை, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு என எந்தப் பழங்கள் இருக்கிறதோ அதனை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, நவ தானியங்கள், துவரம் பருப்பு, வெல்லம், கல் உப்பு, அரிசி போன்றவற்றை சிறு சிறு கிண்ணங்களில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன், மங்களப் பொருள்களான வெற்றிலை, பாக்கு, பழம், பூ உள்ளிட்டவற்றைத் தனியாக வைக்க வேண்டும். மேலும் மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023Representative Image

பிறகு, கிண்ணம் ஒன்றில் சில்லறை நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்னபூரணியின் சிலை வைத்திருப்பவர்கள், அதனை அரிசியால் அலங்கரித்துக் கொள்ளலாம்.

ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை எடுத்து, அதில் முழுவதும் நீர் நிரப்பி உதிரிப்பூக்களைத் தூவி எடுத்துக் கொள்ளலாம். இதில், பச்சை கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு எடுத்து வைத்த பொருள்கள் அனைத்தும் கண்ணாடியில் தெரிய வேண்டும்.

சித்திரை கனி காணுதல்.. எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.? | Chithirai Kani Kanuthal 2023Representative Image

பின், படைப்புக்காக பாயாசம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவற்றைப் படைக்கலாம்.

முதலில், குடும்பத்தில் மூத்தவராக இருக்கக் கூடிய பெண் கண்ணாடியில் காண்பன அனைத்தையும் பார்த்து தரிசிக்க வேண்டும். பின், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தரிசிக்கலாம்.

பின்பு, அனைவரும் தெய்வத்தை வழிபட்டு, இந்த ஆண்டு போல, வரும் எல்லா ஆண்டுகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டி தரிசனம் செய்யலாம்.

இதன் மூலம், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன், வறுமை நீங்கி செழிப்புடன் வாழ்வதற்கு உதவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்