Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

போகி பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா? | Why We Celebrate Bhogi Pongal in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
போகி பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா? | Why We Celebrate Bhogi Pongal in TamilRepresentative Image.

"போகி" என்பது நான்கு நாள் பொங்கல் கொண்டாட்டாத்தின் முதல் நாளாகும். இப்பண்டிகை தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கிய நோக்கமே "பழையன கழிதலும், புதியன புகுதலும்" ஆகும். அதாவது கெட்ட எண்ணங்கள், பழைய பொருட்களை வெளியேற்றி, நல்ல எண்ணங்களை மனதில் கொண்டுவருவது. 

போகி பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா? | Why We Celebrate Bhogi Pongal in TamilRepresentative Image

ஏன் இதுக்கு போகி என்று பெயர் வந்தது?

அதாவது, பழையனவற்றைப் போக்கி புதியதை கொண்டுவருவதால் இதற்கு "போக்கி" என்று பெயர் வந்தது, அதுவே காலப்போக்கில் நம் மக்கள் "போகி" என மாற்றிவிட்டன. முதல் நாளான போகிப் பண்டிகை வட இந்தியாவில் "லோஹ்ரி" என்று அழைக்கப்படுகிறது. குளிர்கால (ராபி) பயிர்களின் அறுவடையைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாள் சூரியன் (சூரியக் கடவுள்), வருணன் (மழை கடவுள்) மற்றும் இந்திரன் (தேவர்களின் அரசன்) ஆகியோரை வணங்குவதற்காக சங்கராந்தி அர்ப்பணிக்கப்படுகிறது.

போகி பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா? | Why We Celebrate Bhogi Pongal in TamilRepresentative Image

ஏன் போகி கொண்டாடுகிறோம்?

மழை மற்றும் மேகங்களின் கடவுளான இந்திரனுக்கு நன்றி கூறவே போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கு செல்வத்தையும் வெற்றியையும் தரும் ஏராளமான பயிர்களுக்காக இந்திரனின் ஆசீர்வாதத்தைப் பெற அவரை இந்த நாளில் வணங்குவார்கள். இதனாலேயே இந்த நாளை 'இந்திரன்' என்றும் அழைப்பதுண்டு.

போகி பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா? | Why We Celebrate Bhogi Pongal in TamilRepresentative Image

போகி எப்படி கொண்டாடப்படுகிறது?

முதலில் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி, சாமந்தி மலர் மாலைகள் மற்றும் மா இலைகளால் அலங்கரித்து, வாசலில் வண்ணமயமான மற்றும் மலர்களால் கோலங்கள் போடப்படும். கரும்புச் செடிகள், மஞ்சள் வேர்கள் கொண்ட பச்சைச் செடிகள் ஆகியவை வீட்டின் முன் கட்டப்பட்டப்படும். பின்னர், பெண்கள் புதிய ஆடைகளை அணிந்துக் கொண்டு புனித நெருப்பைச் சுற்றி மந்திரங்களைப் பாடுவார்கள். இப்படியாக போகி கொண்டாடப்படுகிறது.

அதுவே, ஆந்திரப் பிரதேசத்தில் போகி பண்டிகையின் போதே அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள அனைத்து பழைய பொருட்களும், குறிப்பாக துணி பொருட்களை நெருப்பு மூட்டி அதில் போட்டு எரித்துவிடுவார்கள். இப்படி தான் போகி பண்டிகை கொண்டாடப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்