Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Avoid Terrace Gardening Mistakes: மாடித்தோட்டம் வைத்து செடி வளர்த்துபவரா நீங்கள்…! அப்ப இத கண்டிப்பா செஞ்சே ஆகணும்….!

Gowthami Subramani July 07, 2022 & 17:30 [IST]
Avoid Terrace Gardening Mistakes: மாடித்தோட்டம் வைத்து செடி வளர்த்துபவரா நீங்கள்…! அப்ப இத கண்டிப்பா செஞ்சே ஆகணும்….!Representative Image.

Avoid Terrace Gardening Mistakes: பொதுவாக மாடித்தோட்டத்தில் செடி வளர்த்துபவர்கள் எதாவதொரு விஷயத்தில் தவறு செய்து விடுகின்றனர். இதனால், தாவரங்கள் வளராமல் பாதியிலேயே அழிந்து விடும் நிலைமைக்கு உள்ளாகின்றன (Avoid Terrace Gardening Mistakes).

மாடித்தோட்டத்தின் பலன்

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் மாடித்தோட்டத்தையே அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில் மாடித்தோட்டத்துக்கான ஆர்வம் மக்களிடையே அதிகமாக இருக்கிறது (How to Avoid Terrace Gardening Mistakes in Tamil).

இதில் குறிப்பாக, வெளியில் வாங்கும் காய்கறிகள், பழங்கள், கீரைக்கள் போன்ற பல்வேறு உணவுப் பொருள்கள் தரமில்லாததாகவும், ரசாயனம் கலப்பதாகவும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், பெரும்பாலானோர் மாடித்தோட்டத்தை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், மாடித்தோட்டத்தில் பயிர் செய்யக்கூடிய தாவரங்களைப் பொறுத்த வரை நாம் செழிப்பாக வளர்க்க வேண்டும். மாடித்தோட்டத்தில் செடி வளர்ப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (How to Avoid Terrace Gardening Mistakes at Home).

மாடித்தோட்ட தவறுகளை எப்படி தவிர்க்கலாம்? அதற்கான சில வழிமுறைகள் (How to Avoid Terrace Gardening Mistakes)

தேவையான செடிகளுக்கு மட்டும் நிழற்வலை அமைப்பது

நிழற்வலைகளை வைப்பதற்கான காரணம் அதிக சூரிய ஒளியானது தாவரங்கள் மீது படாமல் இருப்பதற்காக வைப்பதாகும்.

பெரும்பாலும் நம் நாட்டில் வெப்பமண்டல தாவரங்களே அதிக உள்ளன. இதனால், இந்த தாவரங்கள் வளர்வதற்கு அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.

எனவே, இது போன்ற தாவரங்களுக்கு நிழற்வலைகளை அமைக்கத் தேவையில்லை. பூக்காத தாவரங்களான அதாவது கீரை, புதினா வகைகள் போன்றவற்றிற்கு நிழற்வலைகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஒரே குடும்பத் தாவரங்கள் ஒரே பகுதியில் இருத்தல் கூடாது

ஒத்த குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை அருகருகே நடக் கூடாது. இவ்வாறு அருகருகே வைக்கும் பட்சத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களைப் பூச்சிகள் தாக்கக் கூடும்.

இதனால், பூச்சிகள் ஒரு செடியைத் தாக்கிய பின் இதன் தாக்கம் பக்கத்தில் உள்ள ஒத்த குடும்ப செடிக்கும் விரைவாக பரவி விடும் (Terrace Gardening Mistakes).

தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் இவை அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் ஆகும்.

எனவே, இவற்றை அதிக இடைவெளி விட்டு அல்லது வேறு குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களுடன் நடவு செய்தால், இந்த பூச்சியினால் ஏற்படும் தாக்கத்தைப் பரவாமல் தடுக்க முடியும்.

தேவையான அளவு மண் உபயோகித்தல் வேண்டும் (How to Avoid Terrace Gardening Mistakes in India)

இவ்வாறு மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடிகள் வளர்க்கும் போது உபயோகப்படுத்தப்படும் மண், செடி வளர்வதற்குப் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

மிக அதிக அளவிலான மண்ணைப் பயன்படுத்துவது நல்லது அல்ல.

பெரும்பாலும் மாடித்தோட்டத்தில் நீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

பொதுவாக மாடித்தோட்டத்தில் தொட்டியினைப் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதை விட Grow Bag-ஐப் பயன்படுத்துவது நல்லது.

செடிகள் வளையக் கூடாது (Common Mistakes in Gardening)

செடிகளை வளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் படி, ஒரு பையில் ஒரு செடி மட்டும் வளர்ப்பது நல்லது.

அப்போது தான் அந்தந்த செடிக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் அந்த செடிகளுக்குக் கிடைக்கும்.

செடிகளை வளைய விடாமல் நேராகப் படர்ந்து மரம் போல இருக்குமாறு பார்த்து வளர்த்த வேண்டும். இவ்வாறு வளைய விடாமல் வளர்ப்பதன் மூலம் நல்ல மகசூலைப் பெறலாம்.

 உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்