Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு நற்செய்தி....ரூ.20 ஆயிரம் மானியம் அறிவிப்பு...விண்ணப்பிப்பது எப்படி..?

madhankumar July 25, 2022 & 15:03 [IST]
விவசாயிகளுக்கு நற்செய்தி....ரூ.20 ஆயிரம் மானியம் அறிவிப்பு...விண்ணப்பிப்பது எப்படி..?Representative Image.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாரத்தில் பாரம்பரிய காய்கறிகள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருப்பதாக  வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை தெரிவித்துள்ளது.

2022-2023 தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வீரிய உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாகத்தான் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதேபோல், மிளகு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நாற்றுகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது.

அவக்கோடா கன்றுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,760 மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக எலுமிச்சை பழம், டிராகன் ப்ரூட், ஸ்டாப்பேரி பழம், ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.75 ஆயிரம் மானியமும், தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு பெட்டிகளும் மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.

சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சம் மானியமும், மண்புழு கூடாரம் நிரந்தரமாக அமைக்க ரூ.50 ஆயிரம் மானியமும் வழங்கப்பட உள்ளது.

பூண்டு மற்றும் பழ பயிர் சாகுபடிக்காகவும் மற்றும் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிக்காகவும் ஒரு ஹெக்டருக்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது. நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வரை மானியமும் விவசாய முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொண்டும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்வதும் அவசியம். தங்களது சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல், புகைப்படம் 2, வங்கி கணக்கு முதல்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்