Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடக்கொடுமையே!! காசு கொடுத்து வாங்கியா?... விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

Kanimozhi Updated:
அடக்கொடுமையே!! காசு கொடுத்து வாங்கியா?... விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவலம்!Representative Image.

அடக்கொடுமையே!! காசு கொடுத்து வாங்கியா?... விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவலம்!


விளாத்திகுளம் பகுதிகளில் போதிய  மழை இல்லாததால் நீரை விலைக்கு வாங்கி மிளகாய் செடிகள் நடவு செய்யும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான  நாகலாபுரம், புதூர், அரியநாயகிபுரம்,சூரங்குடி, குருவார்பட்டி, பிள்ளையார் நத்தம், கழுகாசலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கம்பு, சோளம், மக்காசோளம், பருத்தி, உளுந்து, பாசி, மிளகாய் ஆகியவை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிகமாக 12 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

விளாத்திகுளம் பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல்  இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் விவசாயிகள் கடந்த சில மாதங்களாக மிளகாய்,சோளம், கம்பு,பாசி, உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிருட்டு வருகின்றனர்.  ஆனால் போதிய மழை இல்லாததால் பயிர்கள் பல்வேறு இடங்களில் விளைச்சல் இல்லாமல் வருகிறது.இருப்பினும் விவசாயிகள்  விவசாய பணியை தொடர்ந்து வருகின்றனர்.


குறிப்பாக மிளகாய் பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பருவமழை போதிய அளவு இல்லாததால் மிளகாய் செடி பயிர்கள் பல்வேறு இடங்களில் நீரின்றி வாடி வருகின்றது.
சில இடங்களில் மிளகாய் விதைகள் விதைக்கப்பட்டு சிறிய செடிகளாக வளர்ந்து காணப்படுகிறது.


சில இடங்களில் விவசாயிகள் மிளகாய் செடியாக வாங்கி வந்து செடியினை நடவு செய்து மழையின்றி மிளகாய்ச் செடி வாடி கருகிவிடும் என்பதால் டிராக்டர் மூலம் ரூ 2000 முதல் ரூ 2500 வரை செலவு செய்து நீரை பெற்று இதற்கு தனியாக கூலி ஆட்களை வைத்து நீரை மிளகாய் செடிக்கு ஊற்றி வருகின்றனர். மேலும் அடுத்து மழை வந்தால் தான் மிளகாய் செடி வளரும் எனவும் இல்லையென்றால் செடி கருகிவிடும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்