Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,130.69
-617.73sensex(-0.85%)
நிஃப்டி21,849.60
-206.10sensex(-0.93%)
USD
81.57
Exclusive

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!

Gowthami Subramani September 22, 2022 & 15:40 [IST]
மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image.

கொரோனா, ரஷ்ய-உக்ரைன் போர் போன்றவற்றின் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதற்கான பற்றாக்குறையும் மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் மிக அதிக வீதத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, பிற்காலத்தில் பெட்ரோலே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் கூறப்பட்டு வருகிறது.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image

பெட்ரோலுக்குப் பதில்

இந்த நிலையில், பெட்ரோலுக்குப் பதில் வேறு எந்த முறைகளில் வாகன எரிபொருள்களைத் தயாரிக்கலாம் என்பது இன்றும் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீப காலமாகவே மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வாகனத்திற்கான எரிபொருள்களைத் தயாரிக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தது. அதன் படி, இராஜஸ்தான் அரசு மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பது குறித்த சில விவரங்களைக் கூறியுள்ளது.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image

இராஜஸ்தான் மாநிலத்தின் அசத்தல் திட்டம்

இந்த திட்டத்தில், எரிவாயு தயாரிப்பிற்கு தினந்தோறும் 100 டன் அளவிலான மாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வரக்கூடிய ஓராண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடையலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டம் சிறப்பான திட்டமாகும்.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம்

அதன் படி, காற்று மாசுபாடு அளிக்கும் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பசுமை எரிபொருள்கள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்த நிலையில், மாட்டுச் சாணத்தைக் கொண்டு பயோ கேஸ் தயாரிப்பதற்கான திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்.பி.சி.எல் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சஞ்சோரில் தொடங்கியுள்ளது.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image

திட்டத்திற்கான பூமி பூஜை

இராஜஸ்தானில், ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் தொடங்கப்படும் இந்த திட்டத்திற்கான பூமி பூஜை ஜலோர் மாவட்டத்தில் உள்ள பத்மேடா என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாக, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாத வகையில் அமைவதாக உள்ளது. அதன் படி, ஹெச்.பி.சி.எல்-ன் கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாகக் கருதப்படுகிறது.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!Representative Image

பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவு

இந்த திட்டத்தின் மூலம் உயிரி எரிவாயு தயாரிப்பதற்கு தினந்தோறும் 100 டன் அளவிலான மாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டு வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் சுற்றுப்புற தூய்மையுடன் நாட்டைப் பாதுகாக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்