Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kisan Credit Card Update: உங்ககிட்ட கிசான் கிரெடிட் கார்டு இருக்கா….! அரசு வழங்கிய சிறப்பு சலுகைகள்..!

Gowthami Subramani July 11, 2022 & 15:00 [IST]
Kisan Credit Card Update: உங்ககிட்ட கிசான் கிரெடிட் கார்டு இருக்கா….! அரசு வழங்கிய சிறப்பு சலுகைகள்..!Representative Image.

Kisan Credit Card Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு பல்வேறு சிறப்பு உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில், என்னென்ன சிறப்பு சலுகைகள், உதவிகள்? முதலிய அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம் (Kisan Credit Card Update).

கிராமப்புற மக்களுக்கு

கிராமப்புற பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

இவ்வாறு கிராம மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கு, கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் எளிதாகக் கடன் பெறுவதற்கு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிசான் கிரெடிட் கார்டு திட்டம்

தொழில்நுட்பத்தினை மேம்படுத்த கிராமப்புற வங்கிகளுக்கு உதவிகளை வழங்குமாறு நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் படி, நாட்டில் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் இருக்கின்றன.

மேலும், இந்த வங்கிகளின் மூன்றில் ஒரு பங்கு குறிப்பாக எடுத்துக் கொண்டால், வட கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் வங்கிகள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. எனவே, இவற்றின் மூலதணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது.

உதவி கிடைப்பதற்கான ஏற்பாடு

இந்த வங்கிகள் அனைத்தும், சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றோர்க்கு கடன் மற்றும் இதர வசதிகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டவையாகும். ஆனால், இந்த வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதால், இதனை மேம்படுத்த அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

கிசான் கிரெடிட் கார்டு திட்டம்

இந்த திட்டத்தின் கீழ், மீன்பிடி மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதை ஆலோசித்து வருகிறது. மேலும், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிசான் கிரெடிட் கார்டைப் பெற்றுக் கொண்டு சிறப்பான சலுகைகளைப் பெறலாம் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்