Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இந்த மரங்களை நடக்கூடாது… அரசின் அதிரடி உத்தரவு...?

Gowthami Subramani [IST]
இனி இந்த மரங்களை நடக்கூடாது… அரசின் அதிரடி உத்தரவு...?Representative Image.

யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு அளித்துள்ளது. இந்த மரங்களை நடக்கூடாது என்பதற்கான காரணங்களையும், யூகலிப்டாஸ் வரும் விளைவுகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

என்னது மரத்தை நட வேண்டாமா?

யூகலிப்டஸ் எனப்படும் தைல மரங்களை அகற்ற தமிழகத்தில் சில மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது. யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவதற்கான காரணம் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

தைலமரம் மற்றும் அதன் விவரங்கள்

யூகலிப்டஸ் மிர்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது தான் தைலமரம். இந்த தைலமரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா ஆகும். யூகலிப்டஸ் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்குப் புகுத்தப்பட்ட தாவரம் ஆகும். இருந்தபோதிலும், பல்வேறு விதமான பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வறட்சியைத் தாங்கக் கூடிய இந்த யூக்கலிப்டஸ் இனங்களான யூகலிப்டஸ் டெரிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் என இரு வகைகள் வறட்சியைத் தாங்க கூடியவையாக வளரும். யூகலிப்டஸ் மரங்கள் கிட்டத்தட்ட 200 அடி உயரம் வரை வளரக் கூடியவையாக இருக்கும்.

யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதற்குக் காரணம்

யூகலிப்டஸ் மரங்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டது. இது சமவெளிப்பகுதிகளில் உள்ள விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு இது ஏற்றது. அதே சமயத்தில் தேவையான மழைப்பொழிவு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்த யூகலிப்டஸ் கடுமையான வறட்சியையும் தாங்கக் கூடியவையாக வளரும் என கூறப்படுகிறது.

இதற்கான காரணம், இவை நிலத்தடி நீரை அதிக உறிஞ்சுவதாகும். இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நீர் இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படும். மேலும், யூகலிப்டஸ் மரங்களின் இலைகள் உதிர்வதன் மூலம், மரங்களுக்குக் கீழே பயிரிடப்பட்டிருக்கும் கடலை போன்றவையும் மகசூலைப் பாதிக்குமாறு அமைகிறது.

இவ்வாறே, யூகலிப்டஸ் மரங்கள் அருகிலுள்ள மற்ற தாவரத்தை வளர விடாது எனக் கூறுகின்றனர். இது சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையால் இதனை உயர் நீதிமன்றம் நடுவதற்கு தடை செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்