Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தினமும் சாமிக்கு பூ வைக்க உங்க வீட்டுல அரளி பூவை இப்படி வளர்த்துங்க…

Gowthami Subramani July 26, 2022 & 18:35 [IST]
தினமும் சாமிக்கு பூ வைக்க உங்க வீட்டுல அரளி பூவை இப்படி வளர்த்துங்க…Representative Image.

How to Grow Arali Plant in Tamil: அரளிப் பூ விசேஷ நாள்களில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டும். அதே சமயம் இதன் விலையும் அதிகமாகக் காணப்படும். அரளிப் பூவை நம் வீட்டிலேயே எளிதான முறையில் சாகுபடி செய்யலாம்.

பொதுவாக அரளி பூ சிவப்பு, வெள்ளை, ரோஸ் என மூன்று நிறங்களில் உள்ளது. இதில், விவசாயிகள் பெரும்பாலும் வெள்ளை நிற அரளி பூவையே தேர்வு செய்து சாகுபடி செய்வர். இருந்தபோதிலும், நாம் தற்போது பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்வதைப் பார்ப்பது சிவப்பு நிற அரளி மலரே ஆகும்.

குறைந்த அளவு தண்ணீர்

பொதுவாக, அரளி பூவை எல்லா வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். அதே போல, இது அனைத்து விதமான காலகட்டத்திலும் சாகுபடி செய்ய முடியும்.

அரளி பூவை சாகுபடி செய்யும் முறை

அரளி பூவை கீழ்க்காணும் முறைப்படி சாகுபடி செய்தால் தினந்தோறும் அதிக அளவிலான மலர்களைப் பறித்துக் கொள்ளலாம்.

முதலில், நிலத்தை நன்றாக உழுது சமன்படுத்த வேண்டும். பின், வரிசைக்கு வரிசை 10 செ.மீ என்ற அளவிலும், செடிக்கு செடி 10 செ.மீ என்ற கணக்கிலும் சுமார் ஒரு அடி ஆழத்தில் குழிபறித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பே, அரளி பூ செடி அல்லது அதன் குச்சியை அந்த குழியில் நட வேண்டும். பொதுவாக, அரளி பூ சாகுபடிக்கு குச்சி நடுவது சிறந்தது.

அதனைத் தொடர்ந்து, குச்சிகள் நன்றாக வளரும் வரை பத்தியம் போட வேண்டும். இதற்கு அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படாது என்பதால், செடிகளை நட்டவுடன் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன் பின்பு, வாரம் இரு முறை என்ற கணக்கில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. தினமும் தண்ணீர் விட வேண்டும் என்ற அவசியமில்லை.

உரங்களை இடுதல்

ஒரு ஏக்கர் அளவிலான அரளிப் பூ சாகுபடிக்கு  45 கிலோ தழைச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து, மற்றும் 90 கிலோ மணிச்சத்து போன்றவற்றை அடியுரமாக இட வேண்டும்.

செடிகளை நட்ட 45 நாள்கள் கழித்த பிறகு, 45 கிலோ தழைச்சத்து உரத்துடன் கூடிய செடிகளின் வேர் பகுதியில் மண் இருக்குமாறு வைக்க வேண்டும்.

நன்றாக வளர்ப்பதற்கான வழிமுறைகள்

அரளிப் பூ செடியை நன்றாக வளர்ப்பதற்கு கீழ்க்கண்டவற்றைச் செய்ய வேண்டும்.

இந்த அரளிப் பூ செடிகள் நடவு செய்த ஆறு மாதத்தில் அதன் பயிர்கள் வளர துவங்கும்.

அதன் பின், செடிகள் நன்றாக வளர்ந்து வரும் சமயத்தில் அதன் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கிள்ளி விடும் போது, அதன் கிளைகள் அதிக அளவில் வளர துவங்கும். இப்படி இருக்கும் போது, செடியும் நன்றாக வளரும்.

மொட்டுக்கள் மலர்வதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அதனை ஒரு பாலீத்தீன் கவரில் பறித்து விற்பனை செய்து விட வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்