Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..

Nandhinipriya Ganeshan Updated:
National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..Representative Image.

இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். மற்றவர்களை போல் ஷிப்ட் முறையெல்லாம் கிடையாது. 24 மணிநேரமும் உழைக்கக் கூடியவர்கள் விவசாயிகள். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் இவர்களை நினைவு கூர்வது நம் கடமை அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றாடம் உழைக்கும் விவசாயிகளை பாராட்ட இந்த நாளை தேர்ந்தெடுத்திருப்பதற்கான காரணம் ஏன்? வாங்க தெரிந்துக் கொள்வோம்.

National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..Representative Image

தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்?

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளையே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவை எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்த போதிலும், இவருடைய பிறந்த நாளை மட்டும் விவசாயிகள் தினமாக கொண்டாடுவதற்கும் ஒரு காரணம் உண்டு. 

பல அரசியல் நெருக்கடி சூழல்களிலும் ஜூலை 1979 ஆம் ஆண்டு, இந்தியாவின் 5வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை இந்திய பிரதமராக இருந்த இவர், 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை' கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவரும் இவர் தான். 

National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..Representative Image

அதுமட்டுமல்லாமல், அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். குறைவான காலக்கட்டத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக இதுபோன்ற முக்கிய அம்சங்களை அமல்படுத்தினார். 

மேலும், ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்தவர். பின்னர், 1987 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி காலமானார். புது டெல்லியில் உள்ள இவருடைய நினைவிடத்துக்கு, "கிசான் காட்" [விவசாயிகளின் நுழைவாயில்] என பெயரிடப்பட்டுள்ளது. 

National Farmers Day | 4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..Representative Image

இதனால் தான், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23-ம் ததேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிகள், கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன. 

விவசாயிகள் தின வாழ்த்துக்கள்!

4ஜி, 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் நமக்கு கஞ்சி ஊத்தப்போவது விவசாயி தான்..

படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல.. மற்றவர்களின் பசிக்காக உழைப்பவனும் கடவுளே.. தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள்..!

உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்.. இனிய தேசிய விவசாயிகள் தினம்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்