Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே எளிதான முறையில் பாரிஜாத செடியை வளர்ப்பது எப்படி?

Gowthami Subramani [IST]
வீட்டிலேயே எளிதான முறையில் பாரிஜாத செடியை வளர்ப்பது எப்படி?Representative Image.

பாரிஜாத மலர்களை பவளமல்லி என்று அழைப்பர். இது ஆன்மீக ஈடுபாடுடைய தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தெய்வங்களுக்கு பிரியமான மலரான பாரிஜாத மலரை நம் வீட்டிலேயே வளர்க்கலாம். பாரிஜாத மலர் என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு பெருமாளுக்கு மிகவும் பிடித்த மலர் தான் பாரிஜாத மலர். இதனை வீட்டிலேயே எளிதான முறையில் சுலபமாக வளர்க்க முடியும். இந்தப் பதிவில், பாரிஜாத மலர்கள் வளர்க்கும் முறையையும், அதனை முறையாக பராமரிக்கும் முறைகளையும் பற்றி காண்போம்.

பாரிஜாத செடிகள் சிறப்பம்சங்கள்

பாரிஜாத செடிகள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே, இந்தச் செடி கிடைக்கும் தருவாயில், விட்டு விடாமல் வாங்கி விடுங்கள். தேவலோகத்தில் பாரிஜாத மலரை இருக்கையாகக் கொண்டு பெருமாள் வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால், பெருமாளுக்கு உகந்தவையாய் இந்த பாரிஜாத மலர்கள் கருதப்படுகின்றன.

மருத்துவப் பயன்களும் கூட

ஆன்மீகம் சார்ந்தது மட்டுமல்லாமல், இந்த பாரிஜாத பூக்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளது. பாரிஜாதம் பெரும்பாலும், ஆயுர்வேதத்தில் மகத்தான பண்புகளைக் கொண்டுள்ளது. பாரிஜாத தாவரத்தின் இலைகள் முதல் வேர்கள் வரை அனைத்துமே பல்வேறு குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதாக அமைகிறது. வலியையும், காய்ச்சலையும் குணப்படுத்தும் இது இன்னும் சில பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

வளர்க்கும் முறைகள்

  • ஒரு சிறிய பாரிஜாத செடியிலிருந்து, நிறைய செடிகளை வளர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
  • இந்தச் செடியை வளர்ப்புதலைத் தூண்ட கற்றாழையை சிறிய அளவு எடுத்துக் கொள்ளலாம்.
  • கற்றாழையில் அந்த தண்டை அமிழ்த்தி, அதன் பின், மண்ணில் பாரிஜாத செடியை ஊண்ற வைக்க வேண்டும்.
  • சம்மர் சீசனைத் தவிர பெரும்பாலும் எல்லா சீசனிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. பூக்கள் வளர வளர வெட்டி விடும் போது, அதிகமாக வளர்வதைக் காணலாம் (பூக்கள் அல்லது காய்ந்த இலைகளை வெட்டுவதன் மூலம்).
  • பாரிஜாத செடி வைக்க நாம் எடுத்துக்கொள்ளும் தொட்டியின் அளவு 12 இன்ச் அல்லது 15 இன்ச் ஆக இருப்பின், அது நன்றாக வளரும் தன்மை கொண்டதாக அமையும். இந்த அளவு கொண்ட குரோ பேக்கில் வளர்ப்பது நல்லது.
  • இவ்வாறு மண்ணில் ஊன்றி வைத்தபின், 15 நாள்களுக்குத் தொடந்து தண்ணீர் விட்டு வர வேண்டும். பிறகு, வேர் முளைத்துள்ளதைக் காணலாம். இந்த செடி எளிதாக வேர் விடும் தன்மை கொண்டது.
  • அடுத்த 1 மாதத்தில் இலைகள் நன்றாக வளர்ந்து பூக்கள் வருவதைக் காணலாம்.

பயன்படுத்தக்கூடிய உரங்கள்

  • 15 நாள்களுக்கு ஒரு முறை டீத்தூளை உரமாகப் போடலாம்.
  • அதே போல, மாதத்திற்கு ஒரு முறை மண்புழு உரம் கொடுக்கலாம்.
  • சில சமயங்களில் இலைகள் மெக்னீசியம் குறைபாட்டினால் மஞ்சள் கலரில் மாறும். இதற்கு ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை எப்சம் சால்ட் சேர்க்கலாம்.
  • மேலும், மாதம் ஒரு முறை சில இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, ஊட்டச்சத்து கொடுக்கலாம். அதாவது, சரிவிகித அளவில் முட்டை ஓடு, வாழைப்பழ தோல், டீ தூள், சாம்பல், மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை நன்றாக காய வைத்து, மிக்ஸியில் அரைத்து அதனை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த உரம் எல்லா வகையான செடிகளுக்கும் நல்ல ஊட்டச்சத்து கொடுக்கக்கூடியவையாக அமைகிறது. இதனை 4 டீஸ்பூன் அளவில் மாதம் ஒரு முறை போட்டால் போதுமானது.

இந்த முறைகளைப் பயன்படுத்தி, பாரிஜாத பூக்களை எளிதாக வளர்க்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Grow Parijat Flower Plant at Home | Can We Grow Parijat Plant in Home | How to Grow Parijat Plant from seeds | How to Grow Parijat Flower Plant at Home in Tamil | How to Grow Parijat Plant from Stems | Where to Plant Parijat Plant as per Vastu | Parijat Plant at Home Vastu | How to Grow Parijat Plant from cutting | Parijat Plant for Sale | Parijat Plant not Flowering | Parijat Plant Flowering Season | How to Grow Parijat Plant at Home | How to Grow Parijat Plant in Pot | How to Grow Parijat flower Plant | How to Grow Parijat Plant from seeds


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்