Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,156.06
-592.36sensex(-0.81%)
நிஃப்டி21,856.15
-199.55sensex(-0.90%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு ஓர் அதிர்ச்சியான அறிவிப்பு..! 12 ஆவது தவணைக்கான விவரம்.. இதில் பல பேரோட பெயர்கள் இல்லையாம்…!

Gowthami Subramani September 19, 2022 & 19:00 [IST]
விவசாயிகளுக்கு ஓர் அதிர்ச்சியான அறிவிப்பு..! 12 ஆவது தவணைக்கான விவரம்.. இதில் பல பேரோட பெயர்கள் இல்லையாம்…!Representative Image.

மத்திய அரசு வழங்கும் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 12 ஆவது தவணை வழங்குவதற்கான சில விவரங்கள் குறித்து வெளியிட்டுள்ளது.

பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா

விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா என்பதாகும். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 வீதம் 3 தவணைகளாக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான தவணைத் தொகை, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் நாள் வெளியானது. ஆனால், இந்த முறை செப்டம்பர் 19 தேதி ஆன நிலையில், தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது போல, இந்த முறை பல லட்சம் போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கால தாமதத்திற்கான காரணம்

அதன் படி, இந்த முறை கால தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுகளே ஆகும். அரசு, eKYC-ஐ கட்டாயமாக்கியுள்ளதன் காரணமாக, பயனாளிகளின் விவரங்கள் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்த காரணத்தினாலே 12 ஆவது தவணைத் தொகையான (ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை) தவணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் eKYC-ஐப் பதிவு செய்ததுடன் பயனாளிகளின் புதிய பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

பிஎம் கிசான் திட்டத்தின் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது?

பயனாளிகள் முதலில் Kisan Portal ஆன அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://pmkisan.gov.in/

பின், அந்தப் பக்கத்தில் உள்ள Menu Bar- Farmer Corner என்பதற்குச் செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் பயனாளிகள் பட்டியல் என்பதைக் க்ளிக் செய்த பிறகு, புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.

அந்தப் பக்கத்தில் நீங்கள் மாநிலத்தில் கீழ் உள்ள Menu-வில் இருந்து, உங்களுடைய மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தையும், தொகுதி மற்றும் கிராமத்தின் பெயர் உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு, Get Report என்பதைக் க்ளிக் செய்தால், முழு கிராமத்தின் பட்டியலும் கிடைக்கும்.

இந்த முறைகளின் மூலம் விவசாயிகள் தங்களது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்