Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Kisan 12 th Installment Date 2022: பிஎம் கிசானின் அடுத்த கட்ட நடவடிக்கை…! விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…!

Gowthami Subramani June 14, 2022 & 15:55 [IST]
PM Kisan 12 th Installment Date 2022: பிஎம் கிசானின் அடுத்த கட்ட நடவடிக்கை…! விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…!Representative Image.

PM Kisan 12 th Installment Date 2022: பிஎம் கிசான் திட்டத்தில் 12 ஆவது தவணையைப் பெற வேண்டுமெனில், விவசாயிகள் இந்தப் பணியை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும். மேலும், இதனை விவசாயிகள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். எனவே, பிஎம் கிசானில் இணைந்து தவணைத் தொகை பெறும் அனைவருமே இந்த முக்கிய அப்டேட்டைத் தவறாமல் செய்ய வேண்டும்.

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்

விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில், அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமாக பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி, ஆண்டுக்கும் மூன்று தவணையாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

மேலும், இத்திட்டத்திற்கான 11 ஆவது தவணை கடந்த மே மாதம் 31 ஆம் நாள் அன்று வெளியிட்டார். அதன் படி, இதற்கான அடுத்த தவணையான 12 ஆவது தவணையும், எந்த வித இடையூறும் இல்லாமல் பெறுவதற்கு கேஒய்சி புதுப்பிப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த இ-கேஒய்சி-க்கான கடைசி தேதியை அரசு வரும் ஜூலை மாதம் 31 ஆம் நாள் வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயர் சரிபார்த்தல்

விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது பெயர்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், இதன் மூலம் பயன்பெறும் நபர்கள் பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

இதில் விவசாயிகள் கார்னர் என்ற விருப்பம் தோன்றும். அதன் பிறகு, அதில் பயனாளிகளில் பட்டியல் என்ற விருப்பத்தில் புதிய பக்கம் தோன்றும்.

அந்த பக்கத்தில், மாநிலம், மாவட்டம் மற்றும் கிராமம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு, அதில் உள்ள அறிக்கைக்குச் சென்று, அதில் அனைத்து விவசாயிகளில் பட்டியல்களையும் பெறலாம். அந்தப் பட்டியலில் விவசாயிகள் அவரவர்களின் பெயர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதன் வலது பக்கத்தில் இருக்கும் e-KYC -ஐக் க்ளிக் செய்யவும்.

அதில், ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீடு உள்ளிட்டு தேடலைக் க்ளிக் செய்ய வேண்டும்.


Representative Image. பிஎம் கிசான் திட்டத்தில் 12 ஆவது தவணை எப்படி பெறுவது? கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்.. இல்லையெனில் உதவித் தொகை இல்லை….!


மேலும், ஆதார் அட்டையுடன் இனைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

அந்த குறிப்பிட்ட எண்ணிற்கு கிடைக்கும் ஓடிபி-ஐ அதில் உள்ளிட வேண்டும். இதன் மூலம் e-KYC புதுப்பிக்கப்படும்.

மேலும், இதற்கான சோசியல் அப்டேட் ஜூன் 30 ஆம் வரை நடைபெறுகிறது.

சமூக தணிக்கை அரசால் கடந்த மே 1 ஆம் தேதி முதல், ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தணிக்கையின் மூலம், விவசாயிகளின் நிதி உதவி பெறுவதற்கான விதிமுறைகள் தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கிராம சபை மூலம் சேகரிக்கப்படும்.

இதன் பிறகே, பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களின் பெயர் நீக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர் சேகரிக்கப்படும்.


PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் பெரிய சிக்கல்…! பணத்தைத் திருப்பிச் செலுத்த அரசு உத்தரவு….! ImagePM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் பெரிய சிக்கல்…! பணத்தைத் திருப்பிச் செலுத்த அரசு உத்தரவு….!


பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்த சிலர் தகுதியற்றவர்களாக இருக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்