Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் 12 ஆவது தவணை எப்படி பெறுவது? கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்.. இல்லையெனில் உதவித் தொகை இல்லை….!

Gowthami Subramani June 10, 2022 & 09:45 [IST]
PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் 12 ஆவது தவணை எப்படி பெறுவது? கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்.. இல்லையெனில் உதவித் தொகை இல்லை….!Representative Image.

PM Kisan: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு உதவித் தொகை மற்றும் அவர்கள் பயிரிடுவதற்கான விதைகளுக்கான மானியத் தொகை போன்றவற்றை வழங்குகிறது. இதில், 12 ஆவது தவணைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் (PM Kisan Samman Nidhi Scheme Tamil).

விவசாய நலத்திட்டம்

பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் (PM Kisan), விவசாயிகளுக்கு தவணை முறையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, ஆண்டு தோறும் ரூ. 6000 வழங்கப்படுகிறது. இதில் 11 ஆவது தவணை கடந்த மே மாதம், விழா ஒன்றில் பங்கேற்ற மோடி அவர்கள் விவசாயிகளுக்கான உதவித் தொகையை வெளியிட்டார். அதன் படி, அனைத்து விவசாயிகளுக்கும் உதவித் தொகை சென்றடைந்தது (PM Kisan Samman Nidhi Scheme).

இதே போல, ஹிமாச்சல் மாநிலம், சிம்லாவில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் 10 கோடி விவசாயிகளுக்கான ரூ. 21 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

கால நீட்டிப்பு

ஆண்டுதோறும், 3 தவணை முறைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை தவணைத் தொகை வழங்கப்பட்டது. அதன் படி, 11 ஆவது தவணைத் தொகை கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, eKYC என்ற திட்டத்தில் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது (How to Apply in eKYC PM Kisan).

அதாவது, PM Kisan திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு eKYC பதிவு கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. ஓடிபி அடிப்படையிலான eKYC PMKisan போர்ட்டலுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். அல்லது அருகிலுள்ள CYC மையங்களுக்குச் சென்று ஆதார் எண் மற்றும் படிவத்தைச் சமர்ப்பித்து புதுப்பிக்கவும் (How to Check Amount on PM Kisan Scheme).

eKYC-ல் எப்படி அப்டேட் செய்வது? (How to Update eKYC for PM Kisan?)

  • பிஎம் கிசான்-இன் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும். https://pmkisan.gov.in/
  • அதன் முகப்புப் பக்கத்தில் வலது பக்கத்தில் உள்ள eKYC ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின், அந்த eKYC பக்கத்திற்குச் சென்று, அதில் ஆதார் எண் குறிப்பிட வேண்டும். கேப்சா கோடு எண்டர் செய்து, search என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, உங்களது ஆதார் எண் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும்.
  • அதனைத் தொடர்ந்து, Get OTP என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதில், நீங்கள் Get OTP என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதனை அந்த குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

கட்டாயம் செய்ய வேண்டும்

இவ்வாறு செய்த பிறகு, இகேஒய்சி பதிவு நிறைவு அடையும். தவணை முறையில் உதவித் தொகை பெறக் கூடிய விவசாயிகள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் 12 ஆவது தவணைக்கான உதவித் தொகை உங்களுக்குக் கிடைக்காது.

உதவித் தொகை பெறும் பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பது எப்படி? (How to Know Farmers Data in India)

  • முதலில், விவசாயிகள் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள முகப்புப் பக்கத்தில் விவசாயிகள் கார்னர் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இதில், பயனாளிகள் பட்டியல் என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • இங்கு, விவசாயிகள் தங்களின் ஆதார் எண், திட்ட பயனாளி எண் அல்லது மொபைல் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் குறிப்பிட வேண்டும்.
  • விவரங்களை உள்ளிட்ட பின், அதில் Get Data என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். இப்போத், பயனாளிகள் பட்டியல் தோன்றும். அந்த பட்டியலில் பயனாளிகளின் நிலை பற்றிய விவரங்களைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்