Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 73,811.76
-527.68sensex(-0.71%)
நிஃப்டி22,438.30
-132.05sensex(-0.59%)
USD
81.57
Exclusive

விவசாயிகளே..! முக்கிய அப்டேட்… பிஎம் கிசான் 12 ஆவது தவணைத் தொகை கட்டாயம் செய்ய வேண்டியவை...!

Gowthami Subramani August 27, 2022 & 11:40 [IST]
விவசாயிகளே..! முக்கிய அப்டேட்… பிஎம் கிசான் 12 ஆவது தவணைத் தொகை கட்டாயம் செய்ய வேண்டியவை...!Representative Image.

பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் 12 ஆவது தவணைத் தொகை பெற விவசாயிகள் அனைவரும் இதனைக் கட்டாயம் செய்ய வேண்டும். மேலும், இன்னும் நான்கு நாட்களாகவே காலக்கெடு உள்ள நிலையில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு இதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில், தவணைத் தொகை வழங்கப்பட மாட்டாது என அரசு எச்சரித்துள்ளது.

பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்

மத்திய அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ், ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது தவணைத் தொகையாக 4 மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணைகளாகச் செலுத்தப்படுகிறது. அதன் படி, இந்த 12 ஆவது தவணைத் தொகையை விவசாயப் பெருமக்கள் பெறுவதற்கு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

eKYC அப்டேட்

பிஎம் கிசான் திட்டத்தில் ஒரு முக்கியமான பயன்பாடு eKYC ஆகும். அரசு அறிவுறுத்தலின் படி, விவசாயிகள் தங்களது eKYC-ஐ அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் முகவரி சரிபார்ப்பு மற்றும் விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய வேன்டும்.

கடைசி தேதி

விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட இந்த eKYC அப்டேட் ஆனது கடந்த மே மாதம் 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இருந்தபோதிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு முன்னதாக ஜூலை 31, 2022 ஆம் நாள் வரை நீட்டித்தது. அதனைத் தொடர்ந்து, PM Kisan பயனாளிகளுக்காக மேலும் 1 மாதம் நீட்டித்து, தற்போது ஆகஸ்ட் 31, 2022 ஆம் நாளுக்குள் அப்டேட் செய்திருக்க வேன்டும் என தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் இந்த eKYC அப்டேட்டினை, ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

PM Kisan திட்டத்தில் eKYC-ஐ ஆன்லைனில் அப்டேட் செய்யும் முறை

முதலில், இதில் பயன்பெறும் விவசாயிகள் மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவரி: https://pmkisan.gov.in/

அதன் பின்னர், Farmer Corner-ல் இருக்கும் eKYC-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

இவ்வாறு செய்த பின்னர், ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். பின், அதனைப் பதிவிட்டு, PM Kisan திட்டத்தில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

PM Kisan திட்டத்தில் eKYC-ஐ ஆஃப்லைனில் அப்டேட் செய்யும் முறை

விவசாயிகள், பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி, ஆஃப்லைன் முறையிலும் eKYC-ஐ அப்டேட் செய்யலாம். இதற்கு விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பொது சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அங்கு விவசாயிகள் தங்களுடைய அனைத்து விவரங்களையும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட தகுதி வாய்ந்த விவசாயிகளின் கணக்கில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் நாள் கணக்கில் வைக்கப்படும் என அரசு தெரிவித்தது. இதுவே, விவசாயிகள் பதிவிட்ட விவரங்கள் தவறாக இருப்பின், அரசு வழங்கக் கூடிய அபராதத் தொகையை விவசாயிகள் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் சரியான தகவல்களைப் பதிவிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாளுக்குள் eKYC-ஐ அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

PM Kisan Next Installment | PM Kisan Gov in Registration Status | PM Kisan Gov in Login | PM Kisan Helpline Number | PM Kisan Next Installment 11th Installment Date | PM Kisan 13 Installment Date 2022 | PM Kisan 12th Installment | PM Kisan 11th Installment Date 2022 Tamil | PM Kisan Next Installment | PM Kisan Gov in Login | PM Kisan Gov in Registration Status | PM Kisan Helpline Number | PM Kisan 13 Installment Date 2022 | PMKisan Gov in Query | PM Kisan Status 2022 Check Aadhar | PM Kisan 12th Installment | PM Kisan 12 Installment Date 2022 | PM Kisan 2022 Payment Date | PM Kisan Installment Dates | PM Kisan Installment Date 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்