Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Kisan Leaked Aadhar Details: 110 மில்லியன் நபர்களின் ஆதார் தகவல்கள் லீக்…! இதற்கான காரணம் என்ன தெரியுமா..?

Gowthami Subramani June 17, 2022 & 16:20 [IST]
PM Kisan Leaked Aadhar Details: 110 மில்லியன் நபர்களின் ஆதார் தகவல்கள் லீக்…! இதற்கான காரணம் என்ன தெரியுமா..?Representative Image.

PM Kisan Leaked Aadhar Details: 110 மில்லியன் கணக்கான மக்களின் ஆதார் தகவல் லீக் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிஎம் கிசான் திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டம் விவசாயிகளுக்காக செயல்படக் கூடிய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி வழங்குகிறது. இவ்வாறு விவசாயிகள் ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000-ஐ வழங்குகிறது. இதற்கு முக்கிய தரவாகப் பயன்படுவது விவசாயிகளின் ஆதார் எண் ஆகும் (PM Kisan Leaked Aadhar Details).

ஆதாரின் முக்கியத்துவம் (Aadhar Card Importance in Tamil)

ஆதார் என்பது நம்முடைய அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கிய டிஜிட்டல் முறை பயன்பாடு ஆகும். ஆதார் பயன்பாட்டின் படி, நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்துவ எண்ணை வழங்கி, அந்த என்ணினை முறையாகப் பயன்படுத்துவதாகும். ஆதார் எண்ணானது 12 இலக்க எண்ணாகக் கருதப்படுகிறது.

கட்டாய ஆதார் (Is Aadhar Card Compulsory in All Places)

அதன் படி, ஆதார் பயன்படுத்தும் நபர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது எந்த ஒரு துறையிலும் ஆதார் அட்டையைத் தான் அடையாளச் சீட்டாகக் கேட்பர். அதன் படி, ஆதார் அட்டையைத் தற்போது பான் கார்டு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் இணைக்க வேண்டும் என்ற கட்டாயமும் எழுந்துள்ளது. ஒரு தனி மனிதனின் ஆதாரத்தைக் குறிப்பிடும் வகையில் அமையும் ஆதார் அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்திலும் கட்டாயம்

அந்த வகையிலேயே, பிஎம் கிசான் திட்டத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், ஆதார் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஒரு தனிநபர் எந்தெந்த திட்டங்களில் இணைந்துள்ளார், அவரது முழு விவரங்களையும் உள்ளடக்கியதாக ஆதார் அட்டை உள்ளது. எனவே, இந்த பிஎம் கிசான் திட்டத்திலும் ஆதார் அவசியம் என கருதப்பட்டது. அவ்வாறே, ஆதார் எண் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது (Aadhar Card Should for PM Kisan Scheme).

பிஎம் கிசான் டேஷ்போர்டு போர்ட்டல்

பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்து தொகை வாங்குவதற்காக கொடுக்கப்படும் ஆதாரங்கள் பிஎம் கிசான் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இந்த போர்ட்டலின் அடிப்படை ஸ்கிரிப்டை விவரங்களைத் திருடுபவர்கள் எளிதாகத் திருட முடியும் (Aadhar Card Leaked Details).

இது குறித்த அறிவிப்பில், விவசாயிகளின் தரவுகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்களின் தகவல்களைப் பெற முடிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் இணையதளத்தின் வாயிலாக, பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுல்ளது.

110 மில்லியனுக்கும் அதிகமான

இதனையடுத்து வெளிவந்த அறிக்கையில், மொத்தம் 110 மில்லியனுக்கும் அதிகமான தரவுகள் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தது (Aadhar Card Details Leaked). மேலும், 110 மில்லியனுக்கும் அதிகமான தரவுகள் கடந்த ஜனவரி 29, 2022 ஆம் ஆண்டு கசிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை நன்கு ஆராய்ந்ததில், அனைவரின் தகவல்களுமே விவசாயிகளுடையது என்பது தெரிய வந்தது. இது பிஎம் கிசான் போர்ட்டலில் இணைந்த விவசாயிகளின் தகவல்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், இது போல ஆதார் விவரங்கள் கசிவது முதல் முறையல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்