Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Kisan Scheme in Tamilnadu: மக்களே…! இனி 2000 ரூபாய் வீட்டுக்கே நேரடியாக வரும்… பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு…!

Gowthami Subramani June 08, 2022 & 18:00 [IST]
PM Kisan Scheme in Tamilnadu: மக்களே…! இனி 2000 ரூபாய் வீட்டுக்கே நேரடியாக வரும்… பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு…!Representative Image.

PM Kisan Scheme in Tamilnadu: பிஎம் கிசான் திட்டத்தில், இந்திய தபால் துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்காக

மத்திய அரசு மக்கள் நலனுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, இது நாள் வரை, வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறக் கூடிய விவசாயிகளின் வீட்டுக்கே நேரடியாக வழங்கும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது (India Post Office Notification About PM Kisan).

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana)

இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டு தோறும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, விவசாயப் பெருமக்களுக்கு மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. அதன் படி, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வழங்கப்படுகிறது (PM Kisan Scheme).

கடந்த மே மாதம்

இத்திட்டத்தின் கீழ் தவணை முறையாக வழங்கப்படும் தொகையின் 11 ஆவது தவணையை கடந்த மே மாதம் 30 தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ், தலா 2000 ரூபாய் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது (Farmers Schemes in Tamilnadu).

வங்கிகளின் மூலம்

இந்த தவணைத் தொகை, மத்திய அரசு வங்கிக் கணக்குகளின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் படியாக இருந்தது. இதில், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. இதனால், அவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று பணத்தைப் பெற அலையத் தேவையில்லை (PM Kisan scheme for Farmers Benefits Tamil).

வீட்டுக்கே நேரடியாக

இவ்வாறு வங்கிக் கணக்கு மூலம் தொகை அனுப்பப்படுவதைத் தவிர்த்து, விவசாயிகளுக்கு நேரடியாக வீட்டுக்கே வந்து கொடுக்குமாறு இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது (How to Get PM Kisan Amount). இது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்