Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70% மானியம்… எப்படி பெறுவது?

Gowthami Subramani November 01, 2022 & 17:30 [IST]
கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70% மானியம்… எப்படி பெறுவது?Representative Image.

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், 2022-23 ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ள 2% பரீமியத் தொகையில், மானியம் வழங்கப்படுகிறது. அதன் படி, தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்போருக்கு 50% முதல் 70% வரையிலான மானியம் வழங்கப்படுகிறது.

அதன் படி, கால்நடை வளர்க்கும் நபர்களில் 70% மானியமும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு 70% மானியத் தொகையும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள நபர்களுக்கு 50% மானியத் தொகையும் வழங்கப்படும்.

இந்த மானியத் தொகை வழங்குவதற்கு, யுனிடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய கால்நடைகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பசு மற்றும் எருமை வயது இரண்டரை முதல் எட்டு வயது வரையிலும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகளுக்கு 1 முதல் 5 வயது வரையிலும் இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும்.

மேலும், இந்த திட்டத்தின் படி அதிகபட்சமாக ரூ.35,000-க்கும் அதிகமாக காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு, அதிகப்படியான மதிப்பீட்டிற்கான காப்பீட்டு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். மேலும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் வரை இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம். இந்த திட்டத்தில் இணைய ஆர்வம் உள்ள கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்