Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… 1 லட்சம் பரிசுத் தொகை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு… யாருக்கு தெரியுமா..?

Gowthami Subramani October 11, 2022 & 16:15 [IST]
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… 1 லட்சம் பரிசுத் தொகை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு… யாருக்கு தெரியுமா..?Representative Image.

நமது மாநில மரமாக விளங்கும் பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பனை மரங்களை நம்பி வாழக்கூடிய வேளாண் பெருமக்கள், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி, கடந்த 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஒரு லட்சம் பனங்கன்றுகளும், 76 இலட்சம் பனை விதைகளும் முழு மானியத்தில் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை, பனை மரங்களில் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசு ரூ.2.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், 50% மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருள்களைத் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50% மானியத்தில் பனைபொருள்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், மேலும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75% மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சிக்கும் இந்த நிதியினை ஒதுக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக எந்த வித ஆபத்தும் இல்லாமல், எளிதாக பனை மரத்தினை ஏறுவதற்கு ஒரு சிறந்த கருவியை கண்டுபிடிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருதைப் பெற கீழ்க்கண்ட விவரங்களைப் பார்க்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவரி: https://tnhorticulture.tn.gov.in/

விண்ணப்பப் படிவம்: https://www.tnhorticulture.tn.gov.in/palmyarh/

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்