Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan 2022 in Tamil: இதுவரை  நல்ல வாய்ப்பாகக் காத்திருந்த  உங்களுக்கு லக் தான்..!  உங்க ராசிக்கு நேரம் எப்படி இருக்குமுனு பாருங்க.... ஜூன் 11, 2022 ராசிபலன்

Manoj Krishnamoorthi June 10, 2022 & 15:00 [IST]
Today Rasi Palan 2022 in Tamil: இதுவரை  நல்ல வாய்ப்பாகக் காத்திருந்த  உங்களுக்கு லக் தான்..!  உங்க ராசிக்கு நேரம் எப்படி இருக்குமுனு பாருங்க.... ஜூன் 11, 2022 ராசிபலன்Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை


Representative Image.

முழுவதும் படிக்க: இன்றைய பஞ்சாங்கம் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


Today Rasi Palan 2022 in Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

மனதில் பிறக்கும் எழிர்ச்சியான எண்ணங்கள்  உங்கள் மனதை உற்சாகப்படுத்தும் உங்கள் தொழிலில் திறமை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் அமையும். உங்கள் பணிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள். திருமண வாழ்வில் துணையுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு நட்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள். நிதி நிலை கொக்ம்சம் நன்றாக இருக்கும். ஒருசில முக்கிய முதலீடுகளில்  பணத்தைப் போடுவதற்கு முன் பலரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

எதிர்பார்த்த வாய்ப்பு கிடைப்பதால் இன்று உங்கள் ராசியில் முன்னேற்றம் காணும் நாளாகும், மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். இன்று பண வரவு இருக்கும், செல்வத்தை செலவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் இன்று கவனமாக இருக்க வேண்டும், சில தவறுகள் ஏற்படும் அதை சரி செய்ய இன்று அதிக நேரம் செலவாகும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் உருவாகும், கலந்துரையாடி முடிவெடுப்பது நல்லதாகும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதுமை!    

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

கடின பாதையைப் பற்றிக் கவலைப்படாமல் லட்சியத்தை நோக்கி நகரும் மிதுன ராசிக்காரரே இன்று அதிகமாக உழைக்க வேண்டும், அதிகமான உழைப்பு உங்களுக்கு வெற்றி அளிக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைகள் வரும், புதிய வேலைகள் சில கஷ்டங்களைத் தரும். நிதி நிலை இன்று பற்றாக்குறையாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி காப்பது நன்மை ஆகும். கணவன் மனைவி உறவில் பொறுமையாக இருப்பது நல்ல புரிதல் உருவாகும், உங்கள் மதிப்பைக் கூட்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதுமில்லை. இன்று இன்பமான சூழ்நிலை இருக்கும், மனம் மட்டும் சிறிய பதட்டத்தில் இருக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

பிறரின் நன்மைக்காக அயராது உழைக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்திற்காகப் பல மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். குடும்பத்தினரின் மூலம் நிம்மதியான மன நிலைக் கிடைக்கும். செல்வ  வரவு இன்று குறைவாகக் காணப்படும், தேவையில்லாத செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் திடீர் குறை ஏற்படும், சிலருக்கு கழுத்து சம்பந்தப்பட்ட வலிகள் இருக்கும். உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவது உடல்நலக் குறையைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

ஓய்வு தேவை!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

கருணை அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரரே உங்கள் ராசிக்கு இன்று அனுகூலமான  தினமாகும். பிறருக்கு உதவி செய்வதாக மனம் மகிழ்ச்சி பெறும், என்றோ நீங்கள் செய்த உதவி இன்று உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்,  இன்று அதிக பணிகள் இருப்பதால் ஓய்வு எடுக்க நேரம் இருக்காது. வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் பேசுவதைத் தடுக்க வேண்டும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. சிறப்பான உடல்நலம் இருக்கும். முன்னேற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

கவலைகள் பல மனதிலிருந்தாலும் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டு இருக்கும் கன்னி ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு உகந்தது அல்ல. பணி நிமித்தமாகப் பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். மனம் அமைதியான சூழலை எதிர்பார்க்கும். வீட்டில் பொறுமையாக இருப்பதால் குடும்பத்தில் இன்று நெருக்கம் அதிகமாகும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நீணட நேர உரையாடல் சலிப்பை உருவாக்கும். செல்வ நிலையில் வளர்ச்சி இருக்கும், செலவு வரவை சரி செய்யும். உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. அலைச்சல் அதிகமாக இருக்கும்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 3


Representative Image. மேலும் படிக்க: துலாம் முதல் மீனம் வரையிலான அடுத்த 6 ராசியின்  ஜூன் 9, 2022  ராசிபலன்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்க ளைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்