Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று பண மழையில் நனைய போகும் 2 ராசிக்காரர்கள் இவரா….! ஜூலை 24, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 23, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan: இன்று பண மழையில் நனைய போகும் 2 ராசிக்காரர்கள் இவரா….! ஜூலை 24, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி 9 ஆம் நாள் சனிக்கிழமை (24.07.2022) தினத்தில் 12 ராசியும் கிரக நிலை மாற்றத்தால் பல நற்பலன்களை பெற்றுள்ளது. அதில் மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24, 2022) பெற்றுள்ள பலனைக் காண்போம்.

நாளைய ராசிபலன் (25.07.2022, திங்கள்)

வார ராசிபலன்(24.07.2022- 30.07.2022)

மாத ராசிபலன்

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 03:00-  04:00 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்களின் மனநிலை இன்றைய தினம் அமைதியாக இருக்கும், இன்று இறை பிரார்த்தனை அதிகமாக இருக்கும். தொழிலில் நீங்கள் சற்று ஓய்வு கொள்ளும் தருணமாக இருக்கும். சந்தைபடுத்தல் தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத செலவு வரும். பண விசயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் வாக்குவாதத்தால் பிரச்சனை வரும், விட்டு கொடுத்து போக வேண்டும். கணவன் மனைவி உறவு இன்று சொல்லும்படி இல்லை. நண்பர்களின் மூலம் மன அமைதி கிடைக்கும். மாணவர்கள் புதிய கலை கற்க ஆர்வம் காட்டுவர். ஆரோக்கியத்தில் உடல்வலி போன்ற தொல்லைகள் இருக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களின் கலகலப்பான சுபாவத்துக்கு இன்றைய தினம் சற்று மெதுவாகப் போவது போலத் தோன்றும், ஓய்வு கிடைக்கும். தொழிலில் வேலைகள் சுமுகமாக நடக்கும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அல்லது சிறிய பரிசு கிடைக்கும்.

திருமண வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும் , வாழ்க்கை துணையுடன் சுப நிகழ்ச்சி அல்லது உறவினர் வீட்டுக்கு செல்வீர்கள். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் குடி கொள்ளும். சிறிய பயணம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறிய உபாயங்கள் இருக்கும், அமைதியான மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தனம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு 

அதிர்ஷ்ட எண்:  3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் ஆளுமைத் திறன் இன்று உங்களின் தொழில் ஸ்தானத்தை வெகுவாக உயர்த்தும், இன்றைய தினம் கோபத்தைக் குறைத்து கொள்வதால் பல ஆதாயம் பெற முடியும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று மிக சிறந்த நாளாக அமையும், நல்ல முன்னேற்றம் இருக்கும். கயில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும், சேமிக்க முயலவும்.

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, பெற்றோரின் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், கால்களில் வலி இருக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Cancer 2022 Horoscope)

தன்மையான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும், உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வழக்கமான வேலைகளை விரைவாக முடித்து சாதனை படைப்பீர்கள். நிதி நிலையில் நல்ல பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவி உறவில் ஒரு நல்லிணக்கம் உருவாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் மூலம் சில வெற்றி கிடைக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். நற்செய்தி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களின் அயராது போராடும் குணத்துக்கு பக்க பலமாக இன்று  ஒரு உறவு கிடைக்கும், தொழிலில் நல்ல திறமையாக பணியாற்றி சக பணியாளரின் உதவியை பெற்றுக்கொள்ளுவீர்கள். செல்வ நிலையில் இன்று செலவு தான் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் இன்று சிறிய ஊடல் இருக்கும், வீட்டின் அமைதி வாக்குவாதத்தால் கெடும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை இருக்கும், ஓய்வு தேவைப்படும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில தடைகள் வரும் பொறுமையாக இருக்க வேண்டும், உங்கள் மன நிம்மதிக்காகச் சிறிய பிரயாணம் செய்வீர்கள். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது.

வீட்டில் நிம்மதி சொல்லும்படி இருக்காது, ஆனால் குடும்ப ஒற்றுமையில் பாதிப்பு இல்லை. கணவன் மனைவி உறவில் இன்று உங்கள் பொறுமை அமைதியான இல்லற வாழ்க்கை அளிக்கும். உடல்நலத்தில் ஓரளவு நன்றாக உள்ளது.  நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

Part 2: துலாம்- மீனம் தினசரி ராசிபலன் (24:07:2022)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்