Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023ல் குழந்தை பாக்கியம் பெறும் ராசிகள்!..| Kulanthai Pakkiyam Perum Rasigal

Vaishnavi Subramani Updated:
2023ல் குழந்தை பாக்கியம் பெறும்  ராசிகள்!..| Kulanthai Pakkiyam Perum RasigalRepresentative Image.

2023ல் ஆரம்பத்தில்  சனிப்பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி நிகழ்வதால் 12  ராசிக்காரர்களும் பல சிறப்புப் பலன்களைப்  பெற உள்ளனர். அதன் படி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, திருமணம் தடை நீங்குதல், காதல் திருமணம் கைக்கூடதால், வேலை வாய்ப்பு ,குழந்தை பாக்கியம், கடன் தொல்லை, ஆரோக்கியமான உடல் நலம் அதன் அடிப்படையில் 2023ல் எந்த ராசிக்காரர்கள் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

2023ல் குழந்தை பாக்கியம் பெறும்  ராசிகள்

2023 ஆரம்பத்தில் குரு பகவான்  மீனம் ராசியில் சஞ்சாரம் செய்வதால். குரு பார்த்தால்  கோடி  நன்மை   குரு என்றால்  குழந்தை என்பது அர்த்தம், 

 குரு பார்வையால்  குழந்தை பாக்கியம் பெறும்  ராசிகளை பார்க்கலாம்.

மீனம்:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டு துடக்கத்தில்  குரு பகவான்  மீனம் ராசியில் சஞ்சாரம் செய்வதால் மிகவும்  அற்புதமான பலன்கள் நடக்க உள்ளது. இத்தனை நாட்களாக தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். குழந்தை  பெரும்  பாக்கியம்  இதில் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். 

கடகம்:

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே….. 

2023ல் ஜனவரி  மாதம்  குரு  பார்வை பெறுவதால் குழந்தை  இல்லை என்ற கவலை  நீங்கும். மேலும், சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் கடக ராசியினரின் தொழில், உத்தியோகம், வியாபாரம் என எல்லா விஷயங்களிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல், வாய்ப்புகள் தேடி வந்தாலும் அவை பெரிய அளவில் திருப்தி தரக்கூடியதாக இருக்காது. இருப்பினும் போராடு தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. 

குரு பார்வையால் கோடி  நன்மை கிட்டும். அதன் அடிப்படையில் பல  வைத்தியம் பார்த்தும் குழந்தை பிறக்கவில்லை என்று கவலைப்படும் உங்களுக்கு குரு பார்வையால் பல நாட்கள் கவலை நீங்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதிக் காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி தேடி வரும். அதை அனுபவிக்க தயாராக இருங்கள். எதிரிகள் தொந்தரவு நீங்கும்.

விருச்சிகம்:

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. குரு பகவான் மே மாதத்தில் உங்கள்  ராசியை பார்ப்பதால் மதிப்பு மரியாதை உயரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். திருமணமான தம்பதிகளுக்குக் குழந்தைப் பேறும் கிடைக்கும். அதேபோல், மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் 6 ஆவது வீட்டிற்குச் செல்வதால், சுப விரையச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் உண்டு. 

மேஷம்:

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதுவரை இருந்து வந்த திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் உண்டாகும். அதேபோல், சொந்த செய்யும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பு இருந்தால் சீரான வளர்ச்சியும் ஆதாயமும் கிட்டும்.

சிம்மம்:

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு மேஷ ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இதனால் திடீர் நன்மைகளைக் கொடுக்கும். பண வருமானமும் அபரிமிதமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும்.  குழந்தை இல்லை என்ற கவலை நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும், அரசு, தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். 

தனுசு:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே! கடந்த ஏழரை ஆண்டுகளாகப் போட்டு பாடாய் படுத்திய ஏழரைச் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், 2023 புத்தாண்டு முழுவதும் அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. குரு பகவான் பார்வை இருப்பதால் வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் கூட நீங்கும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்களும் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய ஆண்டு.குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்பு உண்டு சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்